include_once("common_lab_header.php");
Excerpt for கண் கமலேஷ் டைரி - பாகம் ஒன்று by , available in its entirety at Smashwords
  1. அங்கிள் பவுல்


  1. கதையின் தொடக்கம்


  மதிய நேரம். பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தான் அவன். பகல் வெயிலில் பயணம் செய்வது அவனுக்கு புதிதல்ல. நன்றாக பழகிய பயணம் அது. இருப்பினும் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்ததால் பயணத்தின் அசௌகரியத்தை உணர்ந்தான் கமலேஷ்.

தனது கைபேசியை அனைத்து விட்டு கண்களை மூடியபடி ஏதோ முனுமுனுத்து கொண்டிருந்தான்."மானாமதுர, பாத்திபனூர் அருப்புக்கோட்ட வேற எங்கேயும் வண்டி நிக்காது சார். கைல எல்லாரும் சில்லர வச்சிகோங்க" எங்கிருந்தோ பேருந்து நடத்துனர் கத்திக்கொண்டிருந்தார்.

இரண்டு மூன்று வாலிப பெண்கள் தங்கள் கல்லூரியில் நடந்த சம்பவங்களை சொல்லி ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டிருந்தனர்.

"எல்லாரும் ஒரு நிமிஷம் பாருங்கே.. தீராத தலை வலி, ஒத்த தலை வலி, பல் வலி, முதுகு வலி, மூட்டு வலி எல்லாத்துக்கும் சேத்து இந்த ஒரு மருந்து போதும் ஷார்" என்று ஏதோ ஒரு விளங்காத தைலத்தை யாரோ ஒரு புன்னியவான் விற்றுக்கொண்டிருக்க, அவனுடைய பேச்சின் நடை (slang) இதுவரை தலைவலி வராதவர்களும் தலைவலி வரவழைத்துவிடும் போல..

28 வயது இளைஞன் அவன். ஒரளவு அழகான குழந்தைதனமான முகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாமே?! ஆனால் முகத்தில் தெரியாத maturity (முதிர்ச்சி) அவன் மனதில் மட்டும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

"கோபம் உனக்கு செட் ஆகல" "கோபம் உனக்கு செட் ஆகல"... அவனது முனுமுனுப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. சமூக சீர்த்திருத்தவாதிகளுக்கு அவர்களை இயக்கும் எரிபொருளே கோபம் தான்.

முதலில் அறியாமையில் இருக்கும் சமூகத்தை கண்டு சீர்திருத்தவாதிகளுக்கு கோபம் வருவதும், பின்பு அப்படிபட்ட  சீர்திருத்தவாதிகளின் புதுமையான செயலை கண்டு சமூகம் கோபம் கொள்வதும் சரித்திரத்தில் சகஜம் தான். ஆனால் இங்கே கமலேஷ் ஒன்றும் சீர்த்திருத்தவாதியெல்லாம் கிடையாது. ஆனால் தனக்கு சரியென படாத சில விஷயங்களை பலர் பயபக்தியுடன் செய்வதை கண்டு ஜிரனிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். பிழை எங்குள்ளது? இங்கே ஆராதிக்கப்படவேண்டியவை அனாதையாக விடப்பட ஆடம்பரமான காரியங்கள் ஆராதிக்கப்படுவதாக நினைத்து மனதில் புலம்பிக்கொண்டிருந்தான்.

தனது மனதினை மாற்ற வேறு வழியின்றி கைபேசியை மறுபடி ஆன் செய்துவிட்டு.. தான் புதிதாக வடிவமைத்து கொண்டிருக்கும் நீர் பாசன குறிப்பேடு அன்ட்ராய்டு செயலியை இயக்கிப்பார்த்து கொண்டிருந்தான். கைபேசி மணியொலித்தது. மறுமுனையில் அனிதா.

"எங்கடா இருக்க"? "எவ்வளவு நேரம் கால் பன்றது நாட் ரீச்சபில் நாட் ரீச்சபில் னு வருது"? என்றாள்

"இல்லமா பஸ்ல வந்துடிருக்கன்ல அதான் சிக்னல் வீக்கா இருக்கு, ஒரு 6 மணிக்கு ரீச் ஆகிடுவேன்னு நனைக்கிறேன் மா'

"சரி நல்ல பஸ்ஸா? இல்ல வழக்கம் போல ஓட்ட பஸ்ஸா? அவன் உருட்டிகிட்டு வரதுக்குள்ள 8.30 ஆகிடும்"

உதட்டின் ஓரத்தில் சிறு புன்னகை வெளிப்பட சற்று இலகுவாக இருந்நது அவனுக்கு.

"சரி சரி வந்துடுறன் வை" என்று விட்டு கால்லை கட் செய்தான். அனிதாவிடம் இருந்து வந்த அழைப்பு சற்று கமலேஷின் கோபத்தை திசை திருப்பிற்று.

அனிதாவும் கமலேஷும் நல்ல நண்பர்கள். 9 வருடம் நீடித்த அவர்களது நட்பு ஓருவரையொருவர் திருமணம் செய்து கொண்டபிறகும் மங்காமல் ஓளிவீசும் நட்சத்திரத்தை போன்று மின்னிக்கொண்டிருந்தது.

அவர்களது அறிமுகம் நட்பாக மலர்ந்த நேரமும், நட்பு காதலாக மாறிய தருணமும் அவன் நெஞ்சில் வந்து வந்து சென்றுகொண்டிருந்தது.

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு சரியாக 'முதல் உலகப்போரில்" ஆரம்பமானது அவர்கள் நட்பு................- நட்பாதல் (நட்பு + காதல்) தொடரும்!
2. கமலேஷ் - அறிமுகம்(எதுல விட்டேன்? "முதல் உலகப்போரில் ஆரம்பித்த நட்பு"... .. அதற்கு முன்பு பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான நிகழ்வுகள் சில உள்ளன.)என்ன கோர்ஸ் எடுத்திருக்க? என்றார் அந்த முதியவர். "Horticulture" என்று பெறுமையுடன் பதிலளித்தான் கமலேஷ். !!!! Architecture ???? நல்ல படிப்பு தம்பி என் பேத்தி கூட அதான் சேர்ந்திருக்கா, எப்போதும் கைல நோட்டும் பேனாவுமா எதாச்சும் டிசைன் போட்டின்டுறுப்பா என்றார் அவர். கமலேஷின் முகத்தில் மகிழ்ச்சி குன்றியது. "லாலிரோட்லாம் இறங்குங்க"... நடத்துனரின் அழைப்பு வர... 'சரிங்க ஐய்யா.. நான் இறங்கப்போறேன்" என்று அருகில் அமர்ந்திருந்த முதியவரிடம்  விடைப்பெற்று கிளம்பினான் கமலேஷ்.


பேருந்து நிறுத்ததில் இறங்கி TNAU வை நோக்கி நடந்தவன் நடையில் வேகமில்லை. பெரியவர் கேட்ட கேள்வி ஒன்றும் அவனுக்கு புதிதல்ல.. பலருக்கு Horticulture என்ற படிப்புப்பற்றி தெரிய வாய்ப்பில்லை. தான் ஹார்ட்டிகல்ச்சர் (தோட்டக்கலை) சேர்ந்திருப்பதாக தன்னுடைய உறவினர்களிடம் முதன்முறை கூறும்போது கூட.. "ஹார்ட்டிகல்ச்சரா அப்படினா"??? என்ற கேள்விதான் பதிலாக வந்தது. "ஏன்பா வேற எதாவது நல்ல கோர்ஸ் சேர்ந்திருக்க கூடாதா"? ".டி ஜாயின் பண்ணிருக்கலாம் அதுக்கு தான் நல்ல value னு சொல்றாங்க" கேளிரின் கேள்விகளே மாறி மாறி  மனதினை சுறன்டிக்கொண்டிருந்தது அவனுக்கு.

உலகமே engineering பின்னால் பித்துபிடித்து சுற்றிக்கொண்டிருந்த காலம் அதுதான் விவசாயப்படிப்பை தேர்ந்தெடுத்ததால் "கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி" என பாட்டுப்பாடி கிண்டல் அடித்த தனது உயிர் தோழர்கள் ஐ.டி யை தேர்ந்தேடுத்து போய்விட்டனர். பொதுவாகவே கூட்டதின் பின்னால் ஓடும் பழக்கம் கமலேஷிற்கு இல்லைகாரணம் அவனை சிறு வயதிலிருந்தே பக்குவப்படித்திவரும் அவனது குரு "அங்கிள் பவுல்".


 தன்னுடன் படித்த உயிரிலும் மேலான தோழர்கள் ஐ.டி எடுத்தபோதும் கூட, அங்கிள் பவுலின் "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசி" (Make every effort to enter through the narrow door)  என்ற வார்தைகள் அவன் மனதை சுட்டெரித்துக்கொண்டிருந்ததுஏனெனில் குறுகளான வாசலை கண்டுபிடிப்பதே மிக பெரிய சாதனை என்றால் அதனுள் நடந்து செல்வது எப்படிப்பட்ட தீரமான செயல் என்பது அங்கிள் பவுலின் கருத்து. (அங்கிள் பவுல் பற்றி பின்வரும் பாகங்களில் பார்க்கப்போகிறோம்!) அப்படிபட்ட வார்த்தைகளாள் மனதினை தேற்றிக்கொண்டு நடந்து சென்றவனுக்கு வேளாண்மை பல்கலைகழகத்தின் செந்நிறசுவருகளை கண்டதும் இன்பம் மீண்டும் மலர ஆரம்பித்ததுதோட்டகலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்: 


 பெயருக்கேற்றார் போல் அது ஒரு அழகியத் தோட்டம். கமலேஷின் வகுப்பரையில் கமலேஷுடன் சேர்த்து ஏழே ஏழு ஆண்கள், இருபத்திரண்டு பெண்கள். ஆண் பெண் இருபாலரில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசத்தெரிந்தோர் பன்னிரண்டு, மீதி பதினைந்தில் ஆங்கிலம் ஓரளவு பேசத்தெரிந்தவர், ஆங்கிலம் அடுத்தவர் பேசுவதை மட்டும் புரிந்துகொண்டு  நாமும் அது போல பேச வேண்டும் என ஆசைப்படுபவர்,ஏண்டா இங்க வந்து சேந்தோம்" என்று ஏனையோரை வேற்றுகிரகவாசிகளை போல் பார்பவர்

எல்லாம் அடக்கம்முதல் நாள் வகுப்பில் தான் எந்த இடத்தில் அமரலாம் என இருக்கையை தேடியவர்களைவிட நமது வகுப்பில் யாரை காதலிக்கலாம் என அழகிய முகங்களை தேடியவர்களே அதிகம் எனலாம். பஸ்ஸில் கைகுட்டை போட்டு இடம் பிடிப்பது போல முதல் நாள் இருக்கையில் அமர்ந்த நாற்பது வினாடிகளில் நான்கு அழகிய பெண்கள் புக் செய்யப்பட்டுவிட்டனர்.

இப்பொழுது தான் அறிமுகங்கள் தொடர்கிறது


"ஹாய்.. ஐயம் கார்த்திக் ... மூனாவது row ல லேஃப்ட் லேந்து ஃபஸ்ட்டு என் ஆளு"

"! ஹாய்...  மீ சாய் சதீஸ்! பஸ்ட் ரோல ப்புலு & லாஸ்ட் ரோல கார்னர் என் ஆளு"

"ஹாய் மச்சி. ஐயம் நரேன்! கார்த்திக் ஆளுக்கு பக்கத்துல கீரின் கலர் ட்ரெஸ் என் ஆளு"
"
ஹாய் ஐம் கமலேஷ்"
"
ஹாய் ஐம் நரசிம்மன்"

"ஹாய் ஐம் சுந்தரேசன்". கார்திக் வெள்ளைநிற சாக்லேட் (மில்கி பார் சாக்லேட்) பாய். துரு துரு கண்கள். ஓரளவு நன்றாக படிக்கக்கூடியவன். சிறுபிள்ளைத்தனமாக சில சேட்டைகள் செய்தாலும் எளிதில் அனைவரிடமும் நட்பாகும் நல்ல குனநலங்களை கொண்டவன். நரேன்... விளையாட்டு பிள்ளை... ஆனால் கால்பந்து, கூடைபந்து, கிரிக்கேட் போன்ற எந்த விளையாட்டிலும் நாட்டமில்லை.. chess ல் ஆர்வம் அதிகம். எளியவருக்கு உதவுது, நன்பர்களின் பிரச்சனைகளில் ஒரு பாதுகாவலனாக இருப்பது போன்ற இயல்புகள் உண்டு. சாய் சதீஸ்... இவனது குணங்களை விளக்குவது சாதியமற்ற ஒன்று. நல்ல பையன் என்று தான் நினைக்கிறேன்.
 வகுப்பரையில் ஆசிரியர் கையில் வருகைப்பதிவேட்டுடன் நுழைய... கார்த்திக், நரேன், சாய் முகத்தில் ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. 'மூனாவது ரோல லேஃப்ட் லேந்து ஃபஸ்ட்டு' எந்த பெயருக்கு present sir சொல்லும் என கார்த்திக்கும், கார்த்திக் ஆளுக்கு பக்கத்துல கீரின் கலர் ட்ரெஸ் எந்த பெயருக்கு present sir சொல்லும் என நரேனும், பஸ்ட் ரோல ப்புலு மற்றும் லாஸ்ட் ரோல கார்னர் எந்தெந்த பெயர்களுக்கு present sir சொல்லுவார்கள் என சாய்'யும் ஆவலுடன் காத்துகொண்டிருந்தனர்.


கமலேஷ் பொதுவாக கூச்ச சுபாவம் என்பதால் பெண்களிடம் (ஏன் ஆண்களிடம் கூட) அதிகம் பேச தயங்குவான். பெரும்பாலும் அவனுடைய தலையும் குனிந்தே இருக்கும், அங்கிள் பவுல் அடிக்கடி குறிப்பிடும் செம்மறியாடுகள் போன்று.

தன்னுடைய எஜமான் எங்கு சென்றாலும் ஏறேடுத்து பார்க்காமல் எஜமானின் கால்களை மட்டும் சுற்றி சுற்றி வரும் செம்மறியாட்டை போல தன் அம்மாவை விட்டு வேறு எங்கும் வெளியில் செல்லாமல் வளர்க்கப்பட்டவன் கமலேஷ். தஞ்சையில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்தவன். தனது அன்னையின் அரவணைப்பிலிருந்தும் அங்கிள் பவுலின் அற-அணைப்பிலிருந்தும் வெகு தூரம் சென்று இருப்பது இதுவே கமலேஷிற்கு முதல் முறை.


கமலேஷின் அம்மாவும் அடிக்கடி கும்பகோணத்திலிருந்து கோவைக்கு வந்து தனது மகனை பார்த்துச்செல்வது வழக்கம். அவனுடன் படிக்கும் சகமாணவர்களிடமும் கமலேஷின் அம்மாவும் அப்பாவும் "என் பையன கொஞ்சம் பார்த்துக்கோங்க" என்று ஒவ்வொரு முறையும் சொல்லிச்செல்லவார்கள். இதனால் மாணவிகள் மத்தியில் கமலேஷிற்கு "அம்மா பையன்" "புள்ளப்பூச்சி" போன்ற புனைபெயர்கள் உருவானது. அப்படிப்பட்ட பெயர்களை கொண்டு அழைக்கப்படுவதால் கமலேஷ் வெட்கப்படவில்லை. பெருமைக்கொண்டான். தனது தாய் தந்தை மீது மிகவும் பற்று வைத்திருந்தான் அவன். தனது பெற்றோருக்கு ஒரே மகன். வீட்டில் செல்லப்பிள்ளைதனது பெற்றோர் மீது எந்த தருணத்தில் அதிக மரியாதை வந்தது என ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தான் கமலேஷ். ஒரு நிகழ்ச்சி அவனுக்கு ஞாபகம் வந்தது.


 சுமார் 10 வயது மட்டும் நிறம்பிய சிறுவனாக இருந்த போது நடந்த சம்பவம். கமலேஷ், அவனுடைய அம்மா, அப்பா மற்றும் தாத்தா ஏதோ ஒரு காரியத்தை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். பேச்சு சுவாரசியத்தில் தனது அம்மாவை "லூசு" என அழைத்துவிட்டான் கமலேஷ் . பக்கத்திலிருந்த அவனுடைய அப்பாவிற்கு அவன் கூறிய சொல் சட்டென்று கோபத்தை வரவழைத்தது. சிவந்த முகத்துடன் அடிப்பதற்கு கை ஓங்கிய நிலையில் ... தன்னுடைய அப்பாவிடமிருந்து தப்பித்து பாத்ரூமில் ஓடி ஒளிந்துகொண்டான சிறுவன் கமலேஷ். அரை மணி நேரம் சென்று மெதுவாக எட்டி பார்த்து வெளியே வந்தான். அரைமணி நேரத்திற்குள் தனது தந்தையை அம்மா சமாதானப்படுத்தியிருபார்கள் என தெரியும் அவனுக்கு. வெளியே வந்தவனுக்கு எழுத்துக்கூட்டி படிக்க ஒரு வாசகம் தயாராக இருந்தது. அவன் வீட்டில் எப்போழுதும் இருக்கும் கரும்பலகையில், அன்று அவன் தாயால் எழுதப்பட்ட அங்கிள் பவுலின் வாசகம் :


"If a man curses his father or mother, his lamp will be snuffed out in pitch darkness"


தன்னுடைய தந்தையையும் தாயையும் அவதூறாக பேசுபவனுடைய வெளிச்சம், காரிருளிள் அனைந்துபோகும் என்பதே அதன் அர்த்தம். அதாவது இரவில் நீங்கள் தனியாக இருக்கும் போது power cut ஆனதும் மெழுகுவத்தியை தேட உங்கள் கைபேசியின் டார்ச்சை ஆன் செய்யலாம் என நினைக்கும் போது அது charge இல்லாமல் switched off ஆகியிருந்தால் எப்படி இருக்குமோ அதை போன்று. எப்படிபபட்ட வார்த்தைகள் அவை?????? அங்கிள் பவுலை தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட அதிகாரா பானியில் ஒருவருக்கும் போதிக்க முடியாது. அந்த வாசகத்தின் அர்த்தம் கொஞ்சம் கூட சிறுவனான கமலேஷிற்கு புரியவில்லை.. எனினும் அந்த வார்தையில் இருந்த அனல் அவனுடைய சின்னஞ்சிறு இதயத்தை சுட்டது. அதிலிருந்து அவனுக்கு பெற்றோரின் மீது உள்ள மரியாதையும் அன்பும் அதிகமாயிற்று எனலாம்.


"Bth-08-007 கமலேஷ்"...
"Present sir"...
"Bth-08-008
காவியா"
"Present sir"வருகைப்பதிவு தெடர்ந்து கொண்டிருந்தது....


காவியா சொன்ன sir இல் "ர்" ஒலி வரவே இல்லை. அதே போல் "ர்" ஒலியில்லா sir கள் பதினொன்று வந்தது. (நுனிநாக்கில் ஆங்கிலம் பேசக்கூடிய பன்னிரண்டு பேரில் காவியாவும் ஒருத்தி என பின்னர் புலப்பட்டது அவனுக்கு). எனினும் காவியாவின் 'ர்' ஒலியில்லா "sir" ன் இனிமை மற்ற பதினொன்றில் இல்லை. தன்னுடைய ஐ.டி மெட் ஆன காவியாவின் குரலை கேட்ட கமலேஷ், அந்த நிமிடம் அவளது முகத்தை பார்க்க துணியவில்லை.


அதே நேரத்த்தில் கார்த்திக், நரேன், சாய்யின் ஆர்வதிற்கோ விடைக்கிடைத்திருந்தது. கார்த்திக் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பெயர் சரஸ்வதி, நரேன் எதிர்பார்த்த அந்த பெயர் மகேஸ்வரி. சாய் எந்த ஒரு காரியத்திலும் serious'ஆக இறங்குவதில்லை...! எனவே அவன் எதிர்பார்த்த பெயர்கள் நமக்கு எதுக்கு??! வருகைப்பதிவேட்டை தொடர்ந்து தோட்டக்கலை பற்றிய விளக்கவுரையும் "இந்த படிப்பை, நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இந்த படிப்பு தான் உங்களை தேர்ந்தெடுத்துள்ளது. நீங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள்" என்பது போன்ற சொற்பொழிவும் தலைமை விரிவுரையாளரால் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது.


இரண்டு மாதங்கள் உருண்டோடின. அனைவரும் ஒருவருக்கொருவர் நல்ல நெருங்கிய நன்பர்கள் ஆகினர். ஒரு நாள் யாருமே இல்லா வகுப்பறையில் நால்வர் மட்டும் அமர்ந்து ஒரு குற்றவாளியை துருவி துருவி கேள்வி கேட்டு விசாரனை நடத்திக்கொண்டிருந்தனர். குற்றவாளி கூண்டில் கமலேஷ். விசாரனை நடத்துபவர்கள், கார்த்திக், நரேன், சாய், நிரஞ்சனா.
கார்த்திக்:  சொல்லுடா... சொல்லிரு ...

நரேன்ஆமா மச்சி ... இனி மறைச்சி என்னாக போகுது?...

சாய்விடுங்கடா பையன் ரொம்ப தான் வெக்கப்பட்றான்!

கமலேஷ்அப்படிலாம் ஒன்னும் இல்ல... இதுல என்ன வெக்கம்.?

நிரஞ்சனா அப்போ யார love பன்றேன்னு சொல்லு.....friends கிட்ட சொல்லமாட்டியா??

நரேன் மச்சி நம்ப எல்லாம் அவன் friends'eh இல்ல போல... அதான் சொல்லமாடேங்கிறான்.


(இந்த முறை, தான் காதலிக்கும் நபரை அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை கமலேஷிற்கு)


கமலேஷ் சரி சொல்லிட்றேன்... அது வேற யாரும் இல்ல....


(அனைவரும் தங்கள் காதுகளை கூர்மையாக்கி கொண்டனர்)


(30 வினாடி மௌனத்திற்கு பிறகு, தலை குனிந்த நிலையில், மெல்லிய குரலில் கமலேஷ் தொடர்ந்தான்)

.

.

.

.

.

.

"காவியா"

.
3. அங்கிள் பவுல் அறிமுகம்


Quote of the Week


“I like your Christ, I do not like your Christians. Your Christians are so unlike your Christ.”

― Mahatma Gandhi


முன் குறிப்பு : இந்த கதை ஏறத்தாழ உண்மை சம்பவங்களை கொண்டு எழுதப்படிருந்தாலும் கதாபாத்திரத்தின் பெயர்கள் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன... "அங்கிள் பவுள்" என்கிற பெயரும் சேர்த்து.. சம்பந்தப்பட்வர்கள் சம்மதம் தந்தால் அவர்களின் உண்மை பெயரை பெருமையுடன் அறிவிப்பேன். இப்போ கதைக்கு போவோம்.


அழைப்பு மணி மீண்டும் ஒளித்தது. இந்த முறையும் அனிதா தான்.

எங்க மாமா இருக்க..? அனிதா மகிழ்ச்சியான தருணங்களில் அவ்வப்போது கமலேஷை மாமா வென்று அழைப்பதுண்டு. அனிதாவின் மாமா என்கிற சொல் flashback மயக்கத்தில் இருந்தவனின் சிந்தனைகளில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டது போல தெளியவைத்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்துவிட்டு கமலேஷ் பதிலளித்தான் 'கிட்ட வந்துட்டேன் போல இன்னம் இருபது நிமிஷம்

'சரி மா சரி மா அங்கிள்கிட்டேருந்து letter வந்திருக்கு' என்று கூறிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

"ஹலோ! ஹலோ! அங்கிள் கிட்ட இருந்தா"? ஆர்வத்துடன் கூடிய பரபரப்புடன் கேட்டவனுக்கு.... "பீப் பீப்" என்று அழைபேசி துண்டிக்கப்பட்ட சத்தமே பதிலாக வந்தது.

3 நிமிடம் ஆவதற்குள் 300 முறை கை கடிகாரத்தை பார்த்திருப்பான் கமலேஷ்.

"ஏன் driver இவ்வளவு மெதுவா ஓட்றாரு" என தனக்குள் நொந்துக்கொண்டான். கீழே இறங்கி மின்னல் வேகத்தில் ஓடி போகலாமா என்கிற சிந்தனைகளும் வந்தது அவனுக்கு. இவ்வளவு ஆர்வம் எதற்காக? "அங்கிள் பவுலிடம் இருந்து வந்திருக்கும் கடிதம்". பொதுவாக அங்கிள் பவுல் கமலேஷிற்கு நிறைய கடிதங்கள், மின் அஞ்சல்கள் அனுப்புவது வழக்கம். அவருடைய எழுத்தின் நடை அவனை மிகவும் கவர்ந்திருந்தது. கமலேஷ் தான் வலைப்பதிவுகள் (blogs) எழுத முன்னுதாரணமாக இருந்ததும் அங்கிள் பவுலின் கடிதங்கள் தான். இதுவரை அவர் அனுப்பிய கடிதங்கள் அனைத்தையும் மிகவும் பத்திரமாக வைத்திருக்கிறான் கமலேஷ். தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அங்கிள் அனுப்பிய முதல் கடிதம் இதுவே


அங்கிள் பவுல் - அறிமுகம்.


கமலேஷின் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர். கமலேஷின் தாய் மாமாவிற்கு தான் முதன் முதலில் அவர் அறிமுகமானார். பிறகு கமலேஷின் தாத்தா, அவனுடைய தாய் மற்றும் தந்தை, கடைசியாக சின்னஞ்சிறு கமலேஷ் என அனைவருக்கும் மிகவும் பரிச்சையமானார் அங்கிள் பவுல். மிகவும் சாந்தமானவர். அவருடைய முகத்தில் 'அன்பின்' கலை எப்போழுதும் இருக்கும். சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவர். நிறைய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். உலகில் பல்வேறு இடங்களில் அவருக்கு நண்பர்கள் உண்டு. அவர் பேச வேண்டும் என்பதில்லை ஆனால் அவர் அருகில் இருப்பதை உணர்ந்தாலே மனதில் இருக்கும் பாரங்கள் நீங்கும். இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர். ஆனால் கிறிஸ்தவர் அல்ல. இயேசுவின் குணநலன்களே இவருக்கும் இருக்கும். ஆனால் இவர் எந்த சர்ச்சுக்கும் (church) சென்று கமலேஷ் பார்த்ததில்லை. ஒருகாலத்தில் பல சபைகளுக்கு (church) சென்றிருக்கிறார். ஆனால் இப்பொழுதோ எதற்கும் செல்வதில்லை. வீடுகளில் நடக்கும் பிராத்தனை கூட்டங்களில் கலந்துக்கொள்வார் அவ்வளவு தான். கமலேஷ் பார்ததிலேயே மிகவும் தெய்வபக்தி மிகுந்தவர் அங்கிள் பவுல் தான்.

நீங்கள் கிறிஸ்தவரா? என்று யாரேனும் கேட்டால் "நான் கிறிஸ்தவன் என்பதை விட கிறிஸ்துவை உடையவன் என்று சொல்வதே சரியான பதிலாக இருக்கும் என்பார்". கிறிஸ்துவை பின்பற்றுவதை 'கிறிஸ்தவ மதமாக' பாவிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு ஆனால் மதங்களில் நம்பிக்கையில்லை. தெய்வ பக்தியில் நம்பிக்கையுண்டு அர்த்தமற்ற சடங்குகளில் நம்பிக்கையில்லை. அவர் அதிகமாக பேசி கமலேஷ் கேட்டதில்லைஇயற்கையே தன்னுடைய முதல் வேதாகமம் (பைபிள்) என்று கூறுபவர். ஐசக் நீயுடன் (isac newton) ஐயன்ஸ்டீன் போல இவர் கண்டிபிடித்த பல இயற்கை விதிகள் (laws of nature) மிகவும் ஆச்சரியமானவை. அவைகள் ஏனோ உலகின் கண்களுக்கு மறைவாகவே சென்றுவிட்டது.  (அந்த விதிகளை வரும் பாகங்களில் பார்க்க உள்ளோம்). அவர் இவ்வாறு கூறுவதுண்டு "மனித ஞானம் அவனுடைய கண்டுபிடிப்பில் வெளிப்படுகிறது. கடவுளின் ஞானமோ மனிதன் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விதிகளை சிருஷ்டித்தில் விளங்குகிறது". 


தன்னுடைய வாழ்கையே ஒரு போதகமாக இருக்க வேண்டும் என நினைப்பவர். இந்த குணங்களை பார்க்கும் போது வேதத்தில் இந்த வாக்கியம் ஞாபகம் வரக்கூடும்.


"He will not shout or cry out, or raise his voice in the streets". - The Holy Bible

"அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்"

- பரிசுத்த வேதாகமம்
அங்கிள் பவுல், இயேசு கிறிஸ்துவை பின்பற்றியும், பைபிளை தன் உயிரென நினைத்தும் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ளாத காரணம்  சில உள்ளன. வரலாற்றை நாம் திருப்பி பார்க்கையில்  இயேசு கிறிஸ்துவிற்கு முக்கியமான 12 சீடர்களும்  இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவின் உயிதெழுதழுக்கு பின்னர், இவர்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பரப்பினார்களே தவிர கிறிஸ்தவத்தை பரப்பவில்லை. (கிறிஸ்துவின் போதனைகள் :அன்பு, அகிம்சை, சத்தியம் போன்றவைகள்) தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளவும் இல்லை. அவர்கள் தங்களை விசுவாசிகள் என்றும் கிறிஸ்துவின் சிடர்கள் என்றும் தான் அழைத்துக் கொண்டனர். Christian என்னும் சொல் முதன் முதலில் கிரேகத்தில் Χριστιανός (christianos) என்னும் சொல்லிலிருந்து வந்தது. சுமார் கி.பி 45 ல் அந்தியோகியா (Antioch) என்னும் ஊரிலே கிரேகர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்னும் சொல்லை பயன்படுத்தினர். Χριστιανός (christianos) என்றால் கிறிஸ்துவை பின்பற்றுவோர் (follower of Christ) என்று அர்த்தம். அதன் பிறகு 265 ஆண்டுகள் கழித்து ரோம அரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவின் கொள்கைகளை பின்பற்ற நினைத்தார். (கிட்டத்தட்ட நமது அசோகர் புத்தரை பின்பற்ற நினைத்தது போல).


ஆனால் கிறிஸ்துவின் போதனைகளான எளிமை, அன்பு இவையெல்லாம் நீக்கம் செய்யப்பட்டு அரசர் பின்பற்றுவதற்கேற்ற ஆடம்பரமான காரியங்கள் உள்ளே திணிக்கப்பட்டு புதிதாக ஒரு மதம் ஒருவானது.


அதன் பெயர் ரோமன் கத்தோலிஸம். அதன் பிறகு ரோம சாம்ராஜியத்தால் இந்த மதம் பரப்பப்பட்டு இன்று 1.2 பில்லியன் மக்களை கொண்ட மிக பெரிய மதமாக மாறி இருக்கிறதுரோமன் கத்தோலிஸம் போல இன்று உலகில் 33000+ கிறிஸ்தவ மதப்பிரிவுகள் உள்ளன.


"நீங்கள் கிறிஸ்தவரா"?? என்று யாரிடமாவது கேட்டால்

ஆம். நான் ரோமன் கத்தோலிக்.

ஆம். நான் பிராடஸ்டான்ட்.

ஆம். நான் பெந்தகோஸ்தே.

ஆம். நான் பாப்டிஸ்ட்.

ஆம். நான் மெத்தொடிஸ்ட்.

ஆம். நான் லூத்தரன் சபையை சார்ந்தவன்.

நான் செவன்த் டே அட்வன்டிஸ்ட்.

நான் இவரை சார்ந்தவன்

நான் அவரை சார்ந்தவன்.

இன்னம் ஏராளமான பதில்கள் கிடைக்கும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் முரணானவர்கள்.

அங்கிள் பவுல்  ஒரு வேத வாக்கியக்கியத்தை கூறுவதுண்டு.


Every kingdom divided against itself will be ruined - The Holy Bible

தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்.
-
பரிசுத்த வேதாகமம்.


ரோமன் கத்தோலிக்கர் நாங்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று கூறுவார். (குறிப்பு : கத்தோலிக்கர்கள் புனித போர் என்கிற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை போப் தலைமையில் கொன்று கூவித்தவர்கள்)
பிராடஸ்டான்ட் நாங்கள் தான் வழி என்று கூறுவார்.. இப்படியே வொவ்வொருவரும் தாங்கள் தான் உண்மை என்றும் மீதி அனைவரும் போலி என்றும் கூறிக்கொள்வார்கள்.

இன்று ஒவ்வொறு கிறிஸ்தவனும் வேதாகமத்தை சாராமல் ஏதோ ஒரு போதகரையோ (pastor) கொள்கைகளையோ சார்ந்திப்பதை கண்டு அங்கிள் அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு வினவியிருந்தார்.


One of you says, "I follow Paul"; another, "I follow Apollos"; another, "I follow Cephas"

Is Christ divided? Was Paul crucified for you? Were you baptized into the name of Paul?


உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?


அங்கிள், கமலேஷிடம் அப்துல் காலமின் வார்த்தைகளை அவ்வப்போது கூறுவது வழக்கம்.


"எல்லா பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளை அடையும், ஆனால் கழுகோ மழையைத் தவிர்க்க மேகத்திற்கு மேலாகப் பறக்கும்".

"நீ கழுகினைப் போல மிக மேலே பறக்கப்பறந்தவன், மதம் (religion) சபைகள் (churches) போதகர்கள் (pastors) என்கிற கூடுகளைத் தேடி அலையாதே. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்னும் இரண்டு சிறகுகளை எடுத்துக்கொண்டு மழை மேகத்திற்கு மேலாக பறந்து செல்"


- தொடரும்.....
4. காவியா அறிமுகம்


திடீர் சத்தத்துடண் பேருந்து நின்றது...


"என்னபா ஆச்சு"???? பின் இருக்கையிலிருந்து ஒரு குரல்.

ஒட்டுநர் மெதுவாக கீழே இறங்க நடத்துனரும் மௌனத்துடன் அவரை பின்தொடர்ந்தார்


"என்ன பஸ் வச்சுருக்கானுங்க"? "இந்த லச்சணத்துல டிக்கேட் விலைய வேற அப்பொ அப்பொ ஏத்திக்கிறானுங்க என மாறி மாறி பயணிகள் பேசிக்கொள்ள, படியில் நின்ற இளசுகளும் கீழே இறங்கி டீ கடையை நோக்கி விரைந்தன.

"எப்பா பஞ்ச்சராம் பா .. இன்னம் பத்து நிமிஷம் ஆகுமாம்" படிகட்டிலிருந்து மற்றோரு குரல் ஒலிக்க.. "என்ன பஸ் வச்சிருக்கானுங்க" பஜனை மீண்டும் ஆரம்பமானது


கமலேஷிற்கு புலம்பல் அலர்ஜி. தலைவலி போல் உணர்ந்த கமலேஷ் சற்று தேநீர் அருந்தி இளைப்பாற நினைத்தான். படியில் ஒரு அழகான ஐந்து வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிரியா நாட்டு சிட்ரா போல மனதை கவரும் மழலை முகம். கமலேஷ் அருகில் சென்று "வழி கிடைக்குமா" என புன்னகை கலந்த மௌன மொழியில் அந்த குழந்தையிடம் கேட்க, அந்த சிறு பிள்ளையோ சிரித்துக்கொண்டே தன்னுடைய இரண்டு கைகளால் வழியை அடைத்துக்கொண்டது


குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான் என ரசித்துக்கொண்டான் கமலேஷ்.

"காவியா.... அங்கிளுக்கு வழிவிடு" குழந்தையின் தாயார் அதட்ட...

தன்னுடைய சிரிப்பை அரை நிமிடம் அணைத்துவிட்டு வழிவிட்டது குழந்தை.

"அங்கிளா? எங்க"? என்று தன்பின்னே யாரும் வருகிறார்களா என திரும்பிப் பார்த்தவனுக்கு கொஞ்சம் மெதுவாக தான் மட்டுப்பட்டது ... தன்னை இந்த சமுகம் 'uncle category' ல் சேர்த்து ஐம்பது நாட்கள் ஆகிற்று என்று.

டீக்கடையை நோக்கி நடந்தவன் மனதில் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது


"காவியா.... அங்கிளுக்கு வழிவிடு"....

"காவியா.... அங்கிளுக்கு வழிவிடு"....

"காவியா.... அங்கிளுக்கு வழிவிடு"....


இந்த முறை அவனை சுட்ட சொல் 'அங்கிள்' அல்ல....

'காவியா'....


டீக்கடையில் டீயை பெற்றுக்கொண்டு Flashback ல் மூழ்கினான் கமலேஷ்பத்து வருடங்களுக்கு முன்பு


இடம் : Water Technology Center@TNAUஅது ஒரு இயற்பியல் செயல்முறை வகுப்பு. "தோட்டக்கலைக்கும் மின்காந்த அலைக்கும் ஏன்னடா சம்பந்தம்"? என நினைத்துக்கொண்டு தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பரிசோதனையை பார்த்துக்கொண்டிருந்தான் கமலேஷ். வெகு நேரம் ஆகியும் result வரவில்லை என்கிற கடுப்பு வேறு அவனுக்கு


"Excuse me.. உங்களுக்கு result வந்திருச்சா"? ஒரு மெல்லிய குரல் கமலேஷின் காதுகளில் ஒளித்தது. தன்னைதானோ? என்ன நிச்சயித்துக் கொள்ள திரும்பியவனின் கண் எதிரே ஒரு அழகிய பெண். நீல நிற கண்கள், மெல்லிய உடல், சிறுபிள்ளை போன்ற புன்னகை (கமலேஷின் நலன் கருதி வருணனையை  முடித்துக்கொள்வோம்!)"ஹாய் ஐயம் காவியா"


இதுவரை முகத்தை பார்க்காமல் வெறும் present Si(r) ஐ மட்டும் கேட்டுக்கொண்டிருந்தவன் கண்கள் முன் அந்த இனிய குரலின் சொந்தகாரி நிற்க.. பத்து விநாடி மௌனத்திற்கு பிறகே பேச துவங்கினான் கமலேஷ்.


"ஹாய்" (சத்தம் வரவில்லை, காற்று தான் வந்தது)


"ஹாய்" (இந்த முறையும் காற்று தான்)


சிறிது கணைத்துக்கொண்ட பிறகு ஒரு வழியாக "ஹாய்" (சத்ததுடன் வந்தது).


காவியா (அப்பாவி முகத்துடன்) : "உங்களுக்கு result வந்திருச்சா? Actually என்னோட சேர்த்து நம்ம class la அஞ்சு பொண்ணுங்களுக்கும் இதே experiment தான். எங்க யாருக்குமே result வரல, பசங்கள்'ல உங்களுக்கு மட்டும் தான் இதே experiment. அதான் உங்களுக்கு correct வந்துச்சுனா நானும் கத்துக்கலாமுன்னு கேட்டேன்". 


கமலேஷ் : பரவாயில்லங்க.. நீங்க அஞ்சு பேர் இருக்கீங்க discuss பண்ணிக்கலாம்! நான் யார் கிட்ட கேட்கிறதுனு தெரியாம, result ம் வராம முழிச்சுகிட்டு இருக்கேன்.


காவியா முகத்தில் சற்று பரிதாபம் தெரிந்தது "அச்சச்சோ... நீங்க உண்மையிலேயே பாவம் தான். எனக்கு result வந்தா வந்து தரேன். நீங்களும் அதயே எழுதி வச்சிருங்க" என்று கூறிவிட்டு தனது இருப்பிடத்தை நோக்கி சென்றாள் காவியா


ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு அந்த ஐந்து நிமிட மின்காந்த அலையிலிருந்து வெளியே வந்தான் கமலேஷ்.
'காவியா'. இந்தியாவில் பிறந்து இந்தோனேஷியாவில் வளர்ந்தவள். அவள் தந்தை இந்தோனேஷியாவில் கணக்கு வாத்தியாராக பணியாறிருக்கிறார். குடும்பத்துடன் இந்தோனேஷியாவில் இருந்தவர்கள், சுமத்ராவில் சுனாமி வருவத்திற்கு முன்னரே மறுபடி இந்தியா வந்து கோவையில் குடியேறிவிட்டனர். காவியாவிற்கு ஆங்கிலம் சரலமாக பேசவரும், தமிழும் அருமையாக பேசவரும். ஆனால் தமிழை படிக்கவோ எழுதவோ தெரியாது. இவையாவும் நரேன் மூலமாக தெரிந்து கொண்டான் கமலேஷ். "எதுக்கு மச்சி கேட்குற" என நரேன் சந்தேகத்துடன் கேட்க "இல்ல மச்சி சும்மா தான்" என மழுப்பி விட்டு நகர்ந்தான் கமலேஷ்


கமலேஷும் நரேனும் roommates. தமிழகம் என்னும் விடிதியில் 4ம் எண் அறையில் கமலேஷ், நரேனையும் சேர்த்து நான்கு பேர். மீதி இருவரும் B.Sc Agri. அவர்களில் ஒருவன் பெயர் வினைய், இன்னொருவன் நாகராஜ்.

நரேன் கல்லூரியில் சேர்ந்த நான்கு நாட்களுக்குள் வகுப்பில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் விவரங்களை சேகரித்து வைத்துவிட்டான் (குறிப்பாக பெண்களைப் பற்றி) இரண்டு வாரங்களில் மகேஸ்வரியிடம் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. வினையும், நாகராஜும் பெரும்பாலும் அவர்கள் department நண்பர்களின் அறையிலேயே உறங்கி விடுவார்கள்


இரவெல்லாம் நடக்கும் நரேன் - மகேஸ்வரி இடையிலான பேச்சு வார்த்தையில் வேறு வழியில்லாமல் மாட்டிக்கொள்வான் கமலேஷ். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.

"ஹே please ஏன் இவ்ளோ அடம்பிடிக்கிற... நீயும் என்ன love பண்ண நான் என்ன செய்யனும்"?? இது போன்ற வசனங்கள் தினந்தோரும் கமலேஷின் காதுகளில் ஒலித்து சலித்துப்போனது. அவனிடம் இருந்து போன் வாங்கி "அட ஒத்துக்கோ மா.. night லாம் இவன் tourcher தாங்க முடியல" என்று சொல்லிவிடலாம் போல் இருந்தது கமலேஷிற்கு. எனினும் அது அறை நாகரிகம் அல்ல என்பதால் அமைதியாக உறங்கிவிடுவான். பேச்சுவார்தையின் நடவே சில நேரங்களில் அழுகை சத்தம் கேட்கும், சில நேரங்களில் பாடல்கள் ஒலிக்கும்.

அப்பொழுது இதெல்லாம் மிகவும் புதிதாக இருந்த கமலேஷிற்கு சில விஷயங்கள் கொஞ்சம் கூட புரியவில்லை


1. ஒரு பையனை காதலிக்க விருப்பம் இல்லாத ஒரு பெண் இவ்வளவு love tourcher செய்யும் அதே பையனிடம் ஏன் மறுபடி மறுபடி ஆர்வத்துடன் பேச வேண்டும். அவனிடம தொலைபேசியில் பேச ஆர்வம் காட்டும் பெண்ணிற்கு காதலிக்க மட்டும் எப்படி விருப்பம் இல்லாமல் போகும்.?

2. தன்மானத்தை இழந்து ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் இவ்வளவு தூரம் கெஞ்ச வேண்டுமா?


தனக்கு அந்த நிலைவரும் வரை எவருக்கும் இவையாவும் பைத்தியக்காத்தனமாகாத்தான் இருக்கும். சரி இதனை நரேனிடம் கேட்டு அவன் உணர்வுகளை காயப்படுத்த வேண்டாம் என நினைத்துக்கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்துவிட்டான் கமலேஷ்.


இயற்பியல் மின்காந்த சம்பவத்திற்கு பிறகு, காவியா கமலேஷின் கண்களில் அடிக்கடிப்படும் நிலை வந்தது. கமலேஷ் எதார்தமாக கவனிக்கும் போதெல்லாம் காவியா தன்னை ஓரக்கண்ணால் (சில நேரங்களில் வெளிப்படையாக) பார்பது போன்ற உணர்வு. இது உண்மை தானா? இல்லையெனில் தன்னுடைய மனப்பிரம்மையா? இதை யாரிடம் கேட்டு உறுதி செய்துக்கொள்வது என்ற குழப்பமும் இருந்தது கமலேஷிற்கு.

தோட்டக்கலை ஆசிரியர் வகுப்புக்குள் வர அனைவரும் எழுந்து நின்றனர். சற்றும் எதிபாராத விதமாக ஒரு அறிவிப்பை கொடுத்தார் ஆசிரியர்.

"அனைவரும் அவரவருடைய presentation topic ஐ குறித்துக்கொள்ளுங்கள்"

"ஒரு topic இருவருக்கு. I.D எண் பிரகாரம்"

"அகிலா, அபர்ணா உங்களுக்கான topic 'spacing of fruit crops' " என்று சொல்ல அகிலாவும் அபர்ணாவும் வேக வேகமாக தங்களுடைய குறிப்பேட்டை எடுத்து குறித்துக்கொண்டனர்


இவ்வாறு இரண்டு இரண்டு பேராக topic கொடுத்துவந்தார் ஆசிரியர்.


"கமலேஷ், காவியா... உங்களுக்கான topic "Propagation Techniques"

கமலேஷின் கண்களும் காவியாவின் கண்களும் சந்தித்துக்கொண்டன. (actually அது அன்று பண்ணிரண்டாவது சந்திப்பு. ஆனால் இம்முறை காரணத்துடண்..)

Presentation க்கு ஒரு வார காலம் கால அவகாசம் இருந்தது. சற்று உதறல் ஆரம்பித்து கமலேஷிற்கு. சுதாப்பாமல் presentation செய்யவேண்டுமே இல்லையேன்றால் presentation partner முன் மானம் 'டைட்டானிக்' கப்பலே ஏறிவிடும். வகுப்பு முடிந்ததும் அவரவர் தங்கள் தங்கள் presentation partner உடன் சேர்ந்து விவாதிக்கத் தொடங்கினர். தயக்குத்துடன் நின்றுக் கொண்டிருந்த கமலேஷை காவியாவின் கரம் "ஹாய்" என வரவேற்றது.

அருகே செல்ல... Presentation எவ்வாறு அமைக்க போகிறோம். எந்தெந்த புத்தகத்தை reference காக பயண்படுத்தலாம் போன்ற உபயோகமான தகவல் மட்டும் பரிமாற்றம் ஆனது. Presentation ஐ இருவரும் இரண்டு பாகங்களாக பிரித்துக்கொண்டனர். "Seed Propagation" ஐ கமலேஷும் "Vegetative Propagation" ஐ காவியாவும் பிறித்துக் கொண்டு  presentation ற்கு தங்களது பங்களிப்பை தர முடிவு செய்துகொண்டனர். விடைபெறும் நேரம் வந்த போது "கேட்கலாமா? வேண்டாமா"? என்று யோசித்துக் கொண்டிருந்தான் கமலேஷ்.


"உங்க phone number கிடைக்குமா"? தான் கேட்க நினைத்த கேள்வி காவியாவிடமிருந்தே வந்தது. தன்னுடைய தொலைப்பேசி எண்ணை கொடுத்து காவியாவின் எண்ணை பெற்றுக்கொண்டான் கமலேஷ்.


இவையெல்லாம் நினைத்துப்பார்கையில் கமலேஷிற்கு காவியாவின் மீது எந்த சுழ்நிலையில் ஈர்ப்பு வந்தது என ஞாபகப்படுத்தி பார்க்க முடியவில்லை. பத்து வருடம் ஆயிற்றே.?! 2018 ல்.....


டீக்கான பணத்தை கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறினான். குட்டி காவியாவின் சிரிப்பு அவனை வரவேற்றது. பின் சீட்டில் "என்ன பஸ் வச்சிருக்கானுங்க" பஜனை இன்னம் முடியவில்லை.

ஜன்னல் வழியே பார்த்தபடி மீண்டும் flashback தொடர்ந்தது..


2018 லிருந்து...  2008 ஐ நோக்கி.....


ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் கமலேஷ் படித்த TNAU வில் தான் உள்ளது. Presentation காக சில புத்தகங்களிலிருந்து தகவல்களை சேகரிக்க தனது விடுதிலிருந்து நூலகத்திற்க்கு கிளம்பினான் கமலேஷ். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை பார்க்கப்போகிறோம் என்கிற ஆர்வம் இருந்தது அவனுக்கு. செல்லும் வழியில் கல்லூரி நீச்சல் குளத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. அதை தாண்டி சிறிது தூரத்தில் கல்லூரி மைதானத்தில் நிறைய பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்று நூலகத்தை அடைந்தான். மிகப்பெரிய நூலகத்தில் வேறும் ஆறு பேர் தான் இருந்தார்கள். பெருமூச்சி விட்டபடி, தான் தேடி வந்த தலைப்பில் புத்தகங்களை தேடினான். Seed Propagation of fruit crops (விதைகளின் மூலம் பழச்செடிகளில் இனப்பெருக்கம்) என்கிற புத்தகம் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு ஒர் இருக்கையில் அமர்ந்தான.


புத்தகத்தை விரித்தவுடன் அவன் கண்ணில் பட்ட முதல் வார்தை "Germination" (விதை முளைத்தல்). சுருக்கென்று ஏதோ ஒரு நினைவு அவன் மனதில் மின்னல் வேகத்தில் வந்து சென்றதுதிறந்த வேகத்தில் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் கிறுக்கத்தொடங்கினான். "இந்த வார்தையை இதற்கு முன்பு எங்கோ கேள்விபட்டோமே" சிந்தனைகள் வேகமாக சுழல ஆரம்பித்தது. 2 நிமிட முயற்சிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நினைவிற்கு வந்தது. கிறுக்கிக் கொண்டிருந்தவன்.. இவ்வாறு எழுதத் தொடங்கினான்.
Laws of Germination (முளைத்தலின் விதிகள்)


First Law of Germination.


Second Law of Germination.


இப்பொழுது சரியாக எல்லாம் அவன் நினைவிற்கு வந்துவிட்டது. இது அவனுடைய அங்கிள் சிறுவயதில் சொல்லிக்கொடுத்த மிகவும் அற்புதமான இயற்கை விதிகள். இப்பொழுது அவையாவும் அவன் மனதில் germinate ஆக தயார் நிலையில் உள்ளது.


-  Laws of Germination அடுத்த வாரம் நம் மனதிலும் முளைத்தெழும்பும்.


5. முளைத்தெழுதலின் விதிகள் - அறிமுகம்

Introduction to Laws of Germination - :


Quote of the weekFor a seed to achieve its greatest expression, it must come completely undone. The shell cracks, its insides come out and everything changes. To someone who doesn't understand growth, it would look like complete destruction.


-  Cynthia Occelli


கமலேஷின் தமிழாக்கம்:


ஒரு விதை தன்னால் முடிந்த சிறப்பான செயலை செய்ய முடிவெடுத்துவிட்டால், முதலில் தன்னை தலைகீழாக மாற்றிக்கொள்ள தயாராகவேண்டும். அதன் வெளிப்புற தோல் நொறுக்கப்படும், அதன் உள்ளே இருப்பவை வெளியே தெறித்துவரும், அதன் எல்லா மகிழ்ச்சியான சூழ்நிலையும் தலைகீழாக மாறிப்போகும். உண்மையான வளர்ச்சி என்னவென்பதை அறியா எவரும் இதை உற்று நோக்கினால், "இந்த விதை தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது" என்ற தவறான எண்ணத்திற்கு வந்துவிடுவர்.

சத்தியத்தற்கு மீறிய சக்தி உலதத்தில் மட்டும் அல்ல பரலோகங்களிலும் இல்லை என்று சத்திய சோதனையாளர் அண்ணல் காந்தியடிகள் சத்தியம் செய்து சொல்வதுண்டு. அது முற்றிலும் உண்மையே. மனிதனின் அறிவுக்கெட்டாத அந்த சக்தி சத்தியமாக தான் இருக்கிறது. "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று சொன்னது தெய்வ அன்பின் வெளிப்பாடு (இயேசு கிறிஸ்து). உண்மையான அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படும். அந்த அன்பான சத்தியம் என்றேன்றும் மாறுவதில்லை. காலத்திற்கு ஏற்றால் போல் தன்னை மாற்றிக்கொண்டால் அது சத்தியமாக இருக்க இயலாது. இயற்கை விதிகளில் ஒவ்வொன்றும் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவை.  அதனால் அவைகள் தன்னை மாற்றிக்கொள்வதில்லை


"புவியீர்ப்பு விசையை" எடுத்துக்கொள்வோமே. ஐசக் நியூட்டன் காலத்தில் ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து விடுப்படும் போது அது தரையில் விழுந்தது என்றால்., இன்றும் ஆப்பிள் அவ்வாறே தரையில் விழும், மாறாக காற்று மண்டலத்தில் பரப்பதில்லை. நியூட்டன் காலத்திற்கு பூவியீர்பு விசை இருந்தது, இன்றும் அது அவ்வாறே மாறாமல் உள்ளது. நாளையும் அது மாறப்போவதில்லை. ஒவ்வொரு விதியும் கூட அப்படித்தான். நீயுட்டனின் முதலாம், இரண்டாம், மூன்றாம் விதிகள் (Newton's First law, Second law and Third law of Motion) வெட்ப இயக்கவியலின் முதலாம், இரண்டாம் விதிகள் (Thermodynamics First and Second Law) இவையாவும் என்றேன்றும் மாறுவதில்லை. இதே நிலையான அடிப்படையில் தான் நாம் பார்க்கப்போகிற முளைத்தெழுதலின் விதிகளும் உள்ளது (Laws of Germination). முதன் முதலில் இயற்கை விதி ஒன்று தமிழில் எழுதப்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


ஒரு வேத வசனத்தை விதிகளின் அறிமுகத்திற்காக எடுத்துரைக்க விரும்புகிறேன். இதனை மதரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன். அங்கிள் பவுல், கமலேஷை போன்று நானும் மதங்களை வெறுக்கிறேன்.


அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று


-  வேதாகமம்Then God said, "Let the land produce vegetation: seed-bearing plants and trees on the land that bear fruit with seed in it, according to their various kinds." And it was so.- The Bible


இப்போழுது நாம் விதிகளின் அறிமுகதிற்கு விரைந்து செல்லலாம்.


அன்றோரு நாள் பள்ளி வகுப்பை முடித்துவிட்டு வந்து தன்னுடைய வீட்டு பாடங்களை எழுதிக்கொண்டிருந்தான் கமலேஷ். அவனுடைய அன்பிற்குரிய அங்கிள் வீட்டிற்கு வரவே உற்சாகமாக ஓடி சென்று வரவேற்றான். அங்கிள் வந்த போது வீட்டில் கமலேஷ், அவனுடைய தாத்தா மட்டுமே இருந்தனர். கமலேஷுடைய அம்மா அப்பா இருவருமே வேலைக்கு சென்றுவிடுவார்கள். தாத்தா தான் கமலேஷின் பாதுகாவலர். ஆனால் அவர் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவருடன் அவனால் நெருங்கி உரையாட இயலாது. கமலேஷோ ஒற்றை குழந்தை, பள்ளி விட்டு வந்து விளையாடவோ சகோதரர்களும் இல்லை. இது போன்ற நேரங்களில் கமலேஷை தனிமை தாக்காமல் பார்த்துக்கொண்டதில் அங்கிள் பவுலுக்கு முக்கிய பங்குண்டு. சிறுவர்களிடம் பழகும் போது ஒரு சிறு பிள்ளையை போலவே மாறிவிடுவார். அதே வேளையில் பெரியவர்களே புரிந்துக்கொள்ள திணரும் அறிவியல் தத்துவங்களை சிறுவர்களுக்கு அவர்கள் நடையிலேயே ஊட்டிவிடுவதில் வித்தகர். கிட்டத்தட்ட சாப்பிட அடம்பிடிக்கும் சிறு  பிள்ளைகளுக்கு கதைச் செல்லி உணவை ஊட்டிவிடும் அம்மாவை போல.கதை சுவாரஸ்யத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாக் குழந்தைகளின் அறியாமையும் அழகுதான்.


"இன்னைக்கு என்ன பாடம் சொல்லி கொடுத்தாங்க" இரண்டாம் வகுப்பு பயிலும் கமலேஷிடம், அங்கிள் குழந்தை பாணியில் வினவினார்.


"Living things vs Non Living things" கமலேஷ் சடார் என பதிலளித்தான். இதே கேள்வி பள்ளியில் தலைமை ஆசிரியர் கேட்டிருந்தால் கூட அவ்வளவு வேகமாக பதில் வந்திருக்காது. ஏனெனில் தான் படித்த அறிவியலுக்கும் அங்கிள் கற்றுக்கொடுக்கும் அறிவியலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என அறிந்திருந்தான் கமலேஷ். வழக்கம் போல இந்த பாடத்தையும் அங்கிள் மூலமாக கற்க நினைத்தான் அந்த சிறுவன்.


""!!!!!!!!!........ ஒரு ஆச்சரியமான ஒலி அங்கிளிடம் இருந்து வந்தது.


"லிவ்விங் ........... திங்க்ஸ்....... னான் லிவ்விங் திங்க்ஸ்" "கேட்கவே ரொம்ப அழகா இருக்கே..! அப்டீனா என்ன கமலேஷ்" ? என்று சிறுபிள்ளைக்கேற்ற கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டார். இங்கே தான் அவர் சிறு பிள்ளைகளின் இதயங்களை வெல்லும் வித்தையை கொண்டிருந்தார். ஒரு சிறந்த ஆசானுக்கு சிறு பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் வேண்டும்.


உற்சாகமான தொனியுடன் தொடங்கினான் கமலேஷ். "ஐய்யோ அங்கிள் இது கூடத் தெரியாதா"? "லிவ்விங் திங்க்ஸ்'னா நாம எல்லாம் தான். மனுஷங்க, ஆடு, மாடு, கோழி, தாவரங்கள் (plants) எல்லாம்... ஏன்னா இதுக்கெல்லாம் உயிர் இருக்கு"

"னான் லிவ்விங் திங்க்ஸ்'னா மண்ணு, கல்லு, இந்த மேஜை, இந்த நாற்காலி, , இந்த tv, இந்த கடிகாரம்" ...... என கண்ணில் தென்படுவை எல்லாம்  சொல்லிக்கொண்டே போனவனிடம்

"போதும் போதும்" என சிரித்துக்கொண்டே நிப்பாட்டினார் அங்கிள்.

"புரிஞ்சிக்கிட்டேன் புரிஞ்சிக்கிட்டேன்" "இப்போதைக்கு இந்த வீட்டுல உங்க தாத்தா, நீ, நான் தவிர எல்லாமே னான் லிவிங்க் திங்க்ஸ் தான் இல்லையா"? என்றார் அவர்.


"ஆமா அங்கிள். ஏன்னா இதுக்கெல்லாம் உயிர் இல்ல பாருங்க"! என்றான் கமலேஷ் (எதையோ சாதித்துவிட்ட உணர்வில்)


"கமலேஷ் உன்னால ஒரு விஷயத்தை பார்த்த உடனை அது உயிருள்ளதா? உயிரிள்ளாததா'னு சொல்லமுடியும் அப்படித்தானே"? என்றார் தீடீரென்று.


"ஆமா ஆங்கிள் கண்டிப்பா"


தன்னுடைய பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்தார் அங்கிள்.


"அப்டீனா இது லிவ்விங் திங்கா னான் லிவ்விங் திங்கா பார்த்து சொல்லு பாரப்போம்" என்றார்.அதனை பார்வையிட்ட கமலேஷின் கண்களுக்கு சின்னசின்னதாக ஐந்து கற்கள் தெரிந்தது. அதில் நான்கு கற்கள் பளபள வென இருந்தன ஒரு கல் மட்டும் சுரசுரப்பாக,  வித்தியாசமாக இருந்தது. எப்படி இருந்தால் என்ன? எல்லாம் கல் தானே!!!..


"அங்கிள் கண்டுபிடிச்சுட்டேன் ... இது எல்லாமே னான் லிவிங்க் திங்க்ஸ் தான்" (கமலேஷிற்கே ஏற்ற over confident உடன்)


அங்கிள் முகத்தில் சிரிப்பு மலர்ந்து. ஏனேனில் இந்த விடையை அவர் எதிர்பாத்திருந்தார். ஒருவேளை தப்பி தவறி கமலேஷ் சரியான விடையை சொல்லியிருந்தால் அங்கிள் பாடம் எடுக்க முடியாதே.


"கமலேஷ் நிச்சயாமா தான் சொல்றியா"?
"ஆமா அங்கிள்"


"கமலேஷ்.. எனக்கு இதுல சின்ன சந்தேகம் இருக்கு. இந்த குட்டி குட்டி கல் எல்லாத்தையும் நாம சோதிச்சி பாப்போமா"? என்றார்.


(கல்லை வைத்து என்ன சோதனை வேண்டிக்கெடக்கு.? ) என்ற சந்தேக உணர்வுடன் அரை மனதாக தலையாட்டினான் சின்னஞ்சிறு கமலேஷ்.கமலேஷின் ஆர்வம் குறைவதை அறிந்துக்கொண்ட அங்கிள். கமலேஷிடம் ஓர் அறிவிப்பைத் தொடுத்தார்.


"கமலேஷ். இந்த ஐந்து கல்லையும் வைத்துக்கொள். நான் சொல்வதை கேள். இதில் ஓர் அதிசயம் நடக்கப்போகிறது. இந்த ஐந்து கல்லில் ஒரு கல் மட்டும் ஜீவினுள்ள கல் (living stone) அது எது என கண்டுப்பிடிக்கப்போகிறோம். நீ ready யா"? என்றார்.


சிறுவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. Living stone ? அதாவது உயிருள்ள கல். "இது என மேஜிக்கா"?  என்றான் ஆர்வமுடன்.


"Magic இல்ல கமலேஷ் ... It's a miracle" அவர் கண்களில் ஒரு தத்தரூபமான ஒளி தெரிந்தது. "அற்புதங்களை தேடி அழைந்து கொண்டிருக்கும் நாம் கடவுளின் படைப்பில் எண்ணற்ற அற்புதங்கள் உள்ளன என்பதை காண தவறுகிறோம்". என்றார் அவர்."இதில் உயிருள்ள கல் எது என கண்டுபிடிக்க நான் என்ன செய்ய வேண்டும். இது அனைத்தும் அசைவில்லாமல் இருக்கிறதே" என்றான் சிறுவன்.


"ஐந்து கொட்டாங்கூச்சி எடுத்துக்கொள் . அவை அனைத்திலும் மண் நிறைப்பிக் கொள். ஐந்து கல்லைகளையும் ஒவ்வொரு கொட்டாங்கூச்சியிலும் ஒன்றோன்று வைத்து, ஒரு கப் தண்ணீர் விட்டு வெளிச்சம் படும் இடத்தில் வைத்து விடு" என்றார் அங்கிள்.


"அப்படி வைச்சா.. என்னாகும்.?? Living stone பேசுமா"? என்றான் மழலையாக.


"நீ இதை செய்துவிட்டு மூன்று நாள் கழித்து நடக்கும் அற்புதத்தை பார்" என்று அங்கிள் கூற...


"மூன்று நாளா" ??? என்றான் கமலேஷ் முகதில் சிறிது சலிப்புடன்.


"பொறுமை மிகவும் முக்கியம் கமலேஷ்" என புன்னகையுடன் கூறிவிட்டு விடைப்பெற்றார் அங்கிள்.


விறு விறு வென ஓடி அங்கிள் தன்னிடம் கூறிய படியே செய்துவிட்டு , நடந்த சங்கதிகளை தன் பெற்றோரிடம் எடுத்துரைத்தான் கமலேஷ். அவர்கள் மகிழ்ச்சியுடன் "வெரி குட் கமலேஷ்" என பாராட்டினர்.


"அம்மா living stone என்னமா செய்யும்"?

என்று சிறுவன் வினவ.


"அத மூன்று நாள் கழிச்சு நீ தான் எனக்கு சொல்லனும்" என்றார்கள் சிரித்திக்கொண்டே.


முதல் நாள் : கமலேஷ் காலை எழுந்த உடன், ஓடி சென்று கொட்டாங்கூச்சிகளை பார்வையிட்டான். ஒரு மாற்றமும் இல்லை


அற்புதமும் நிகழவில்லை, அன்று மாலை அங்கிளும் வரவில்லை.

இரண்டாம் நாளும் அதே கதை தான்

அற்புதமும் நிகழவில்லை, அன்று மாலை அங்கிளும் வரவில்லை.


முன்றாம் நாள் காலை, ஆர்வம் சிறிதும் குறையாமல் ஓடி சென்றவனை வரவேற்க ஒர் அற்புதம் காத்துக்கொண்டிருந்தது.

முதல் நான்கு கொட்டாங்கூச்சிகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. ஐந்தாம் கொட்டாங்கூச்சியிலோ... ஒரு சின்னஞ்சிறு செடி முளைத்திருந்தது. மிகவும் குட்டியாக. அரை மணி நேரம் சந்தோஷத்தில் மூழ்கி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தான் கமலேஷ். தானாக சிரித்துக்கொண்டும் குதித்துக்கொண்டும் , விண்வெளிக்கு விண்கலத்தை வெற்றியுடன் அனுப்பிய விஞ்ஞானிகளை போன்றதொரு கொண்டாட்டமே அந்த சிறுவனுக்கு இருந்தது.


அம்மா, அப்பா, தாத்தா அனைவரிடமும் இதனை காட்டி சந்தோஷத்தை பகிர்ந்துக்கொண்டான். அனைவரும் அவனுடன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு அவரவர் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.  பள்ளியில் அவன் நண்பர்கள் அனைவரிடமும் தன்னுடைய "உயிருள்ள கல்" சோதனை பற்றி கூறினான் கமலேஷ்.


மாலை நேரம் வர வர கமலேஷின் ஆர்வம் அதிகமானது. தன்னுடைய ஆசான் இன்று கண்டிப்பாக வருவார் என நம்பினான். வீட்டிற்கு சென்றவுடன் புத்தக மூட்டையை அலமாறியில் வைத்துவிட்டு வாசலின் எதிரே அமர்ந்து கொண்டான்.


ஐம்பது நிமிடம் கழித்து தொலைவிலே அங்கிள் பவுலின் உருவம் தெரிந்தது.

எழுந்து இரண்டு கைகளை ஆட்டியவாறு குதிக்கத்தொடங்கினான் கமலேஷ்.


புன்னகையுடன் தனது "முளைத்தெழுதலின் விதிகள்" என்ற பாடத்துடன் கமலேஷை வந்தடைந்தார் அங்கிள் பவுல்..


விதிகளைக் குறித்த ஆழ்ந்த விளக்கங்கள் அடுத்த வாரம் தொடரும்.....
6. முளைத்தெழுதலின் முதலாம் விதி :
First Law of Germination:

                              


2008
நூலகத்தில் அமர்ந்திருந்த கமலேஷிற்கு சற்று முச்சுத்திணறல்  ஏற்பட்டதுநெற்றி முழுவதும் வியர்வை துளிகள்இரும்பிக்கொண்டே ஓடி போய்   தண்ணீர் குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து பருகினான்சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு புத்தகத்தை எடுத்து அதன் இடத்திலேயே வைத்துவிட்டு நூலகத்தை விட்டு வெளியே நடந்தான்ஜில்லென ஓர் தென்றல் அவனை வருடிவிட்டு சென்றதுஇதமாக இருந்தது கமலேஷிற்கு.


2018
அந்த இதமான உணர்வை இன்றும் அவனால் உணரமுடிந்ததுபஸ் சரிசெய்யப்பட்டுவிட்டதுகீழே இருந்த பயணிகள் எல்லாம் ஏறிக்கொள்ளபேருந்து மீண்டும் நகர ஆரம்பித்ததுமழை மேகத்துடன் கூடிய தென்றல் காற்று வீச.. Flashback ம், Flashback ன் Flashback ம் மனதில் தொடர ஆரம்பித்தது.


மறுபடியும் 2008
இளவெயிலின் மாலை நேரத்தில் நூலகத்தை விட்டு வெளியே வந்தவன்தன் கால்கள் போகும் திசையில் நடக்கத்துவங்கினான்கால்கள் நேராக பல்கலைகழக பழத்தோட்டத்திற்கு நடத்திச்சென்றது. (Orchard) ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டான் கமலேஷ்அணைத்து வைத்திருந்த மூளையை இயக்கத்துவங்கினான். "எப்படிபட்ட கருத்துக்கள் அவை???? இவற்றை நம்மால் எப்படி மறக்க முடிந்தது"???? என தனக்கு தானே கேட்டுக்கொண்டான்தற்போது உள்ள ஒட்டுமொத்த விஞ்ஞான நம்பிக்கைக்கு எதிராக சவால்விடக்கூடிய Theory அதுஅந்த பிரம்மாண்டமான theory எளிய வகையில் ஓர் சிறு குழந்தைக்கு ஊட்டிவிடப்பட்டது என்பது தான் ஆச்சரியம்.


Flashback ன் Flashback

உள்ளே நுழைந்த அங்கிள் பவுல் சிரித்துக்கொண்டே "Happy Easter கமலேஷ்என்றார்.கமலேஷ் ஆச்சரியத்துடன் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த நாள்காட்டியை

 ஓடி சென்று பார்த்து விட்டு
"அங்கிள் இன்னைக்கு Easter இல்லையேஎன்றான்
அங்கிள் கொடுத்த விதை மண்ணில் புதைக்கப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததையும் அந்த விதை உயிர்தெழுந்ததை கமலேஷ் கொண்டாடிய விதம் Easter கொண்டாட்டத்தைப் போன்றது எனவும் அங்கிள் புரிந்துகொண்டிருந்தார்.
ஆனால் கமலேஷிற்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு நேரே கரும்பலகைக்கு சென்று இவ்வாறு எழுதினார்.முளைத்தெழுதலின் முதலாம் விதி :
First Law of Germination:

உயிரற்ற ஒருபொருளால் உயிருள்ள ஒருபொருளை உற்பத்தி செய்யமுடியாது.
(அல்லது)
உயிருள்ளப் பொருளால் மட்டுமே உயிருள்ளப் பொருளை மறு உற்பத்தி செய்யமுடியும்.

"புரிகிறதா கமலேஷ்என்றார்.

கமலேஷ் : "புரிகிறது அங்கிள்.... ஆனால்"....

அங்கிள் ஆனால்......??? "புரியல"????

கமலேஷ் : "ஆமா அங்கிள்".

அங்கிள் விரிவாக எடுத்துரைக்க ஆரம்பித்தார்.. கரும்பலகையில் ஒரு விதையின் படத்தை வரைந்தார்.

"நான் Living stone என கூறினேன் அல்லவாஅதன் பெயர் ஆங்கிலத்தில் 'seed' எனப்படும் தமிழில் 'விதைஎன்பார்கள்இது கல் அல்லஉன்னுடைய புரிதலுகாக அப்படி சொன்னேன்மற்ற நான்கும் வெறும் கல் தான்அதில் உயிர்கிடையாது".

"அங்கிள் ஒரு நிமிஷம்எனக்குறுக்கிட்டான் கமலேஷ்.

"என்ன கமலேஷ்"???

"அங்கிள் ..... ஆனால் இந்த விதையும் பார்பதற்கு உயிரற்ற கற்களை போல தானே இருந்தது"???? "பிறகு எப்படி விதையால் மட்டும் செடியை"...

"நல்ல கேள்வி கமலேஷ்... நீ அறிவானவன்என்று மனதாரப் பாராட்டினார் அங்கிள்.

சிறுவன் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.

"அது பார்பதற்கு உயிரற்றதைப்போல இருந்தாலும்.... அதற்குள் ஒரு ஜீவன் தனக்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது"

"விதைக்குள் ஒரு ஜீவனா"? என்றான் சிறுவன்

"ஆமாம்" ... "அதனை ஆங்கிலத்தில் Embryo என்றும் தமிழில் விதைக்கருவென்றும் அழைக்கிறார்கள்விதைக்கரு வெண்பது ஒரு முதிர்ச்சியடையா செடி - immature plant.


"இந்த விதைக்கருவை சுற்றி வெளிப்புற விதைத்தோல் அல்லது விதை ஓடு  (Seedcoat) அமைந்துள்ளதுஇந்த விதைத்தோலுக்குள் விதை கருவும் அதற்கு தேவையான உணவும் மிகவும் நேர்த்தியாக Packing செய்யப்பட்டுள்ளன".


கமலேஷ் கவனித்துக்கொண்டிருக்கிறானா என்று அறிய ஒரு கேள்வியை  கேட்டார் அங்கிள்.


"இப்ப சொல்லு பாக்கலாம்..? இவை மூன்றில் ஜீவன் எங்குள்ளது??? விதையின் ஒட்டிலா? (வெளிப்புறத் தோல்விதையில் சேமிக்கப்பட்ட உணவிலாஅல்லது விதைக்கருவிலா"?

"விதை கருஅங்கிள்என பதிலளித்தான் சிறு கமலேஷ்.

'Veryyyyy Gooooddd" என நெகிழ்ந்தார் அங்கிள்.

"அங்கிள்... அந்த விதைக்கருவில் தானே உயிர் இருக்கிறதுபிறகு விதையின் ஓடு மற்றும் சேகரிக்கப்பட்ட உணவு எதற்காக உள்ளது"? என்று வினாவினான் .

அங்கிளுக்கு அவன் கேட்கும் கேள்விகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தின"Why it is as it is... Why it exist at all"? 


அங்கிளின் உதடுகள் மென்மையாக இந்த வார்த்தைகளை உச்சரிக்க அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது.

துடிதுடித்துப் போனான் சிறுவன். "என்னாச்சு அங்கிள்... ஏன் அழறீங்க"??

"ஒன்னும் இல்ல கமலேஷ்நீ கேட்ட கேள்விகள் எனது Stephan Hawking ஐ நினைவுப்படுத்தியதுஎன்றார் அவர்.

"ஓர் அற்புதமான மனிதர் அவர்.


'பேரண்டம் ஏன் இப்படி இருக்கிறதுமுதலில் அது எதற்காக இருக்கிறது'?
என்ற கேள்விகான பதிலை தேடி அவரது பேரண்டத்தின் பயணம் ஆரம்பமானதுஅது இன்னும் சென்று கொண்டே இருக்கிறது என்றார்கொடிய நோய் ஒன்று அவருடைய உடல் பாகங்களை முடக்கிவிட்ட போதும் அவருடைய அறிவை அந்த நோய் கட்டிவைக்க முடியவில்லை

அது நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே இருக்கிறதுகேள்வி இல்லாத இடத்தில் பதிலுக்கு வேலையில்லை.StephanHawking அவரது நண்பராஅவர் அங்கிளுக்கு எவ்வாறு பழக்கம்

இன்னும் அவருடன் அங்கிள் தொடர்பில் உள்ளாராஎன்ற கேள்விகளெள்ளாம் கமலேஷின் மனதில் எழுந்தாலும் அதை அவரிடம் கேட்கத்துணியவில்லை.

ஆச்சரியம் என்னவெனில்தனது கருத்திற்கு எதிர்மறையான கருத்தை உடைய ஒருவரை இவ்வளவாய் நேசிக்க முடியுமென்றால் அதற்கு கமலேஷ் கண்ணால் கண்ட உதாரணம் அங்கிள் பவுல் தான்.


(குறிப்பு :StephanHawking மிகச்சிறந்த இயற்பிலாளர். Big Bang theory மீது நம்பிக்கை உடையவர்.  கருப்பு துளை ஒன்று வெடித்து சிதறி  காலமும் வெளியும் (Space & Time) உருவாகிவெட்ட வெளி மிகவும் வேகமாக விரிவடைந்துஅது சற்று குளிர்ச்சி அடைந்த பிறகு ஈர்ப்பு விசை உண்டாகி அதன் மூலம்  அணுத்துகள்கள் தோன்றியதாகவும்அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் பிறப்பிக்க அதன் வழியே ஹைட்ரஜன் ஹீலியம் போன்ற வேதியல் பொருட்கள் உருவானதாகவும்பின்னர் முப்பது கோடி ஆண்டுகள் கழித்து விண்மீன்களும் சூரிய குடும்பங்களும் தோன்றியதாகவும்  பிறகு பூமி என்னும் கோள் உயிரணுக்கள் வாழ ஏற்ற தட்பவெப்பம் கொண்டுள்ளதால் முதலில் நுண்ணுயிர்கள் உண்டாகி அதன்பிறகு பரிணாம வளர்ச்சியால் மற்ற உயிரினங்கள் படிப்படியாக உருவாணதாகவும் இன்றைய அறிவியல் உலகம் ஆணித்தரமாக நம்புகிறதுஒரு கூட்டம் அண்டங்கள் வெடித்து சிதற காரணமாக இருந்த அந்த கருப்புத் துளையை கடவுளின் துகள்கள் (God's Particle) என்று கூறுகின்றனர்மற்றோறு இயல்பியல் வல்லுணர்களின் கூட்டம்.. "பிடித்துவிட்டோம்நேறுங்கிவிட்டோம். God's Particle ஐ அடைந்துவிடுவோம்என பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.)


ஆனால் இந்த எளிமையான மனிதர்  God's Particle ஐ ஒரு சிறிய விதையை கொண்டு ஒரு சிறுவனிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
"உயிரற்ற ஒரு பொருளால் உயிருள்ள ஒரு பொருளை உற்பத்தி செய்ய இயலாது".
"ஆனால்
உயிருள்ள ஒரு பொருளால் உயிரற்ற பொருட்களை உருவாக்க முடியும்".

"விளங்கவில்லையே அங்கிள்".


உயிருள்ள அனைத்தும் நம் கண்ணால் காணப்படும் உயிரற்ற பொருட்கள் யாவும் ஏதோ ஒரு உயிரற்ற இயற்பியல் வேதியல் பொருட்களாலோஅணுத்துகளின் மூலமாகவோ உண்டாக்கப்படவில்லைமாறாக உயிருள்ள ஒரு மேம்பட்ட ஜீவனால் உண்டாக்கப்பட்டவை”

   

ஒரு மாங்கனியின் விதையை (Mango seed) எடுத்து காண்பித்தார் அங்கிள்

"இந்த விதையை பார்இதற்கு முன்பாக இது மாங்கனியிலிருந்தது". "மாங்கனியையும் அதிலிருந்த விதையையும் எது உற்பத்தி செய்தது"? என்று கேட்டார்.

"மாமரம்என்றான் கமலேஷ்.

"Very nice" "மாமரம் living thing ? Non living thing ?

"Living thing அங்கிள்"

"Super".
அங்கிள் தொடர்ந்தார்...
நான் கையில் வைத்திருக்கும் இந்த மா விதையை மண்ணில் புதைத்து வைத்தால் என்ன ஆகும் தெரியுமாமற்றொரு மாமரம்செடியாக முளைக்கத்துவங்கும்". "இந்த விதையானது மூன்று முக்கிய காரணிகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறது".
1. தண்ணீர்
2. வெட்பம்
3. காற்று.


இவை மூன்றும் கிடைக்கும் தருணத்தில் உள்ளே இருக்கும் விதைக்கருவிளிருந்து முதலில் வேர் வளர்ந்து விதையின் ஓட்டை கிழித்துக்கொண்டு வெளியே வரும்பிறகு மெல்லிய இரு இலைகள் மறுமுனையிலிருந்து உதித்து 

வரும்


இந்த மெல்லிய இலைகளை ஆங்கிலத்தில் Cotelydon என்றழைப்பார்கள்.

இது செடியாகிமரமாகிபூக்களை பூக்கச்செய்துமகரந்த சேர்கையால் மற்றொரு உயிரை உற்பத்தி செய்கிறதுஅதாவது மகரந்த சேர்க்கையால் பூவிலிருந்து காய் உருவாகின்றனகாய் பிறகு கனியாகும்அந்த கனியில் தான் விதையிருக்கும் அந்த விதையில்........


"மற்றொரு உயிர் இருக்கிறது"...... "அதே மாமரத்தின் ஜீவன்".... 


ஓர் உயிர் மற்றொரு உயிரை உற்பத்தி செய்தல்.


இப்படி வைத்துக்கொள்வோம் இந்த விதை மாமரத்திலிருந்து வந்ததுஅந்த மாமரம் மற்றொரு மாமரத்திலிருந்து... இப்படியே பின்னோக்கி ஒட்டிப்பார்த்தால்... உலகின் முதல் மாமரம் எங்கிருந்து வந்தது

நீ உன் தந்தையிடமிருந்து வந்தாய்உன் தந்தை உன் தாத்தாவிடமிருந்துஇப்படியே பின்னோக்கி ஓட்டிபார்த்தால் உலகின் முதல் மனிதன் எங்கிருந்து வந்தான்.?


சிறுவனுக்கு இதனை அறிந்துக் கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தது.

"அண்டங்கள் பேரண்டங்கள் கோள்கள் உயிரினங்கள்     அனைத்துமே ஏதோ ஒரு உயிருள்ள பொருளிலிருந்தது தான் வந்திருக்கின்றனஎன்றார் அங்கிள்.

"ஏதோ ஒரு உயிருள்ள பொருள் என்ன அங்கிள்"??? "கடவுளா"? என்றான் கமலேஷ்.


அங்கிள் புன்னைகையுடன் கமலேஷை பார்த்தார்அந்த புன்னகையின் அர்த்தம் என்ன என்பது இன்று வரை அவனுக்குத் தெரியவில்லை.


கடவுள் என்னும் சொல்லின் அர்த்தம் ஆராதிக்கப்பட வேண்டிய ஒருவர் என்பதாகும்.


நாம் இப்பொழுது காலச்சக்கரத்தில் பயணித்து காலத்தின் தொடக்கத்திற்கு செல்லலாம்

அங்கிள் கரும்பலகையில் ஒரு வட்டத்தை வரைந்தார்அதில் "ஜீவன்என்று எழுதினார்.

அண்டங்களே உருவாகாத நிலையில் அந்த உயிருள்ள ஒரு பொருள் மட்டுமே இருந்ததுஅந்த உயிருள்ள ஒரு பொருளை நான் "ஜீவன்"

(The Life) என குறிப்பிட விரும்புகிறேன்அந்த ஜீவன் ஒரு சாத்தியமுள்ள சக்தியாக இருந்ததுஅந்த ஜீவனே ஒரு சக்தி."அங்கிள்... எனக்கு ஒரு சந்தேகம்அந்த சக்தி எப்படி உருவானது"? "அதை யார் உருவாகினார்கள்என்று குறிக்கிட்டான் சிறுவன்.


It can be neither created nor destroyed 


அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது கமலேஷ்அது அதுவாவே இருக்கிறது". என்றார் அங்கிள்


"ஒரே ஒரு ஜீவன்அந்த ஜீவனால் சிந்திக்கமுடியும்பேசவும் கேட்கவும் முடியும்ஆனால் உரையாட தான் தன்னை தவிர யாரும் இல்லையேஒரு விதைப்போல தன்னந்தனியே தனிப்பெரும் சக்தியாக இருந்ததுகாலத்தின் தொடக்கத்தில் அந்த ஜீவன் மற்றோரு பரிமாணம் எடுக்க வேண்டியதாயிற்று.   விதைக்கருவிலிருந்து மரம் வருவது போலஜீவனின் இந்த நிலையை ஜீவவிருட்சம் Tree of life)   என்று அழைக்க விரும்புகிறேன்அதற்காக இது பார்ப்பதற்கு மர 

வடிவில் இருக்கும் என்பது அர்த்தமல்ல. நீ எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அப்படி கூறுகிறேன்.".


"மாமரம் மாங்கனிகளை உற்பத்தி செய்வது போலவும்கொய்யா மரம் கொய்யா கனிகளை உற்பத்தி செய்வது போலவும்ஜீவவிருட்சம் (உயிர்மரம்)  எதனை உற்பத்தி செய்யும்"?  என கேட்க  


"ஜீவன்களை" (உயிரினங்களைஎன்று நொடியில் பதிலளித்தான் கமலேஷ்.


"எளிதில் புரிந்து கொண்டாய் கமலேஷ்என பெருமைகொண்டார் அந்த சிறப்புமிக்க ஆசான்


இப்பொழுது உன்னுடைய விதைஓட்டையும் அதிலிருக்கும் உணவு பற்றிய கேள்விக்கும், stephan Hawking கேள்விக்கும் ஒரே பதில் தான்.

உயிர் விதைகருவில் தானே இருக்கிறதுபிறகு விதைஓடும்அதிலிருக்கும் உணவும் எதற்காக?.

அண்டங்கள் எதற்காக?

Why it is as it is? Why it exist at all?

விதைக்கருவை வளரச்செய்யவும் அதனை பாதுகாக்கவும் எப்படி விதைஓடும் சேமிக்கப்பட்ட உணவும் பயன்படுகிறதோ அதே போல அந்த ஒரே ஒரு ஜீவன் 

தான் மறுஉற்பத்தி செய்யப்போகும் ஜீவராசிகளை (உயிரினங்களைவளரச்செய்யவும்பாதுகாக்கவும் அண்டங்களும் கோள்களும் அந்த ஜீவனால் 

உருவாக்கப்பட்டன.


"அந்த ஜீவன் ஏன் மற்ற உயிரினங்களை உற்பத்தி செய்ய வேண்டும்என வினவினான் சிறுவன்.


"தனது தனிமையை போக்கவும்தன்னை ஆராதிக்கவும் தான்என்று முதலாம் விதியை முடித்தார் அங்கிள்.


தொடரும்.

7. Echo of First law of Germination : Origin of Lives


I agree that water is essential for living beings on earth to grow and survive. Without water we cannot live on earth. So It is our duty to save water which was given by god.


But now our question is "What is the origin of Lives"?


Water cannot produce a single microbial spore. Can anyone show me the evidence that water produces microorganisms or microbial spore?  


Yes. It is basic building block of our body. Upto 60% of an adult human body is water. But it will not produce a life. 


Inside a Seed, even inside an Embryo there will be a life waiting for a favourable condition to germinate. it's favarouble conditions to germinate are moisture (Water), heat and air.


Before formation of water, Before formation of Earth, Before formation of space , Before formation of universe. There is a life, which can reproduce other lives.  Life of a Bacteria was there before formation of universe and it had been waiting for its favourable condition to produce spore. Life of plants was already there, before the universe was created. It had been waiting for its favourable condition to grow and survive. Life of human was there, before the earth was created. It had been waiting for the media (earth) to live. Source of lives is not 2 atoms of Hydrogen and one atom of oxygen which are attached with covalent bond.Origin of each and every lives was one "The Life" (eternal life) The Eternal life which depends on its own power for survival.


Non living particles cannot give birth to a living thing. Combination of 118 elements in our periodic table will not produce a life. Only life can reproduce another life.முதலாம் விதியின் எதிரோலி உயிர்களின் தொடக்கம்


தண்ணீர் தான் இவ்வுலகில் அணைத்து உயிர்கள் வளரவும், உயிர் வாழவும் வைக்கிறது என்பதை நான் மனப்பூர்வமாக ஓப்புக்கொள்கிறேன்.  தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் எந்த உயிரும் உயிர் வாழ முடியாது. எனவே கடவுள் கொடுத்த இந்த அற்புத படைப்பை காப்பது நம் கடமை. தண்ணீரை  காப்போம். உலக குடிநீர் தின நல்வாழ்த்துக்கள்.  


இப்பொழுது நம் கேள்வி என்னவெனில். உயிர்களின் தொடக்கம்  என்ன?. உயிர்கள்  எதிலிருந்து தோன்றின


தண்ணீரால் ஒரு நுண்ணுயிர் கருவணுவை கூட உற்பத்தி செய்ய இயலாது! உங்களில் யாரவது, தண்ணீரால் ஒரு நுண்ணுயிரையோ அல்லது நுண்ணுயிரின் கருவணுவையோ உற்பத்தி செய்ய இயலும் என்ன நிருபிக்க முடியுமா ?????  


ஆம் . தண்ணீர் தான் நம் உடலின் முக்கிய கட்டுறுப்பு என்பதை மறுப்பதற்கு இல்லை. 60 சதவிகிதம் வரை ஒரு சராசரி வயதுடைய  மனிதனின்  உடலில் தண்ணீர் உள்ளது. இருப்பினும் தண்ணீர் உயிரை தோற்றுவிப்பது இல்லை. எனவே ஹைட்ரஜனின் 2 அணுவும் ஆக்சிஜெனின் 1 அணுவும் சக பிணைப்புடன் இணைந்த ஒரு பொருளால் உயிர்கள் தோற்றுவிக்கப்படவில்லை


முளைத்தெழுதலின் முதலாம் விதியில் நாம் தெரிந்து கொண்டபடி, விதையின் உள்ளே, விதை கருவின் உள்ளே ஒரு உயிர் தனக்கான எற்ற சூழ்நிலை அமையும்வரை முளைத்தெழுவதற்காக காத்திருக்கும்ஒரு உயிர் முளைத்தெழுவதற்கான  எற்ற சூழ்நிலை ஈரம் ( தண்ணீர் ) வெட்பம் மற்றும் காற்று.


தண்ணீர் தோன்றும் முன்னரே, இந்த உலகம் தோன்றும் முன்னரே, இந்த அண்டங்கள் தோன்றும் முன்னரே மற்ற உயிரினங்களை உற்பத்தி செய்ய கூடிய, ஒரு ஜீவன் இருக்கிறது.


இந்த அண்டங்கள் தோன்றும் முன்னரே அந்த  ஜீவனுக்குள் பாக்டீரியாவின் உயிர் மற்ற பாக்டீரியாவின் கருவணுவை மறு உற்பத்தி செய்யக்கூடிய தன்னைக்கான ஏற்ற சூழ்நிலைக்காக காத்துக்கொண்டிருந்தது. அந்த ஜீவனுக்குள் அண்டங்கள் சிருஷ்டிக்கபடும் முன்னரே தாவரங்களின் உயிர் தான் வளரவும், வாழவும் ஏற்ற சூழ்நிலைக்காக காத்துக்கொண்டிருந்தது. மனிதனின் உயிர் இந்த உலகம் தோன்றும் முன்னரே அந்த ஜீவனுக்குள் ஒளிந்திருந்தது. அது தான் வாழ்வதற்கு ஏற்ற ஒரு ஊடகம் உண்டாக காத்துக்கொண்டிருந்தது


ஒவ்வொரு உயிர்களின் தொடக்கமும் ஒரு உயிர் தான் (நித்திய ஜீவன் ) உயிர்வாழ தன்னுடைய சக்தியையே சார்ந்திருக்கும் ஒரு ஜீவன்.


உயிரற்ற ஒரு பொருளால் உயிருள்ள ஒரு பொருளை உற்பத்தி செய்ய இயலாது. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள வேதியல் பொருட்கள் மாறி மாறி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உயிர்களை உற்பத்தி செய்ய முடியாது. ஒரு உயிருள்ள பொருளால் மட்டுமே மற்றொரு உயிரை மறுஉற்பத்தி செய்ய இயலும் While explaining "Higgs Boson Vs The Life"  with my close friend in a chat.

[18/03, 9:54 PM] Ganesh J: Higgs Boson is a Sub Atomic Particle... Scientists call it as a God Particle From which this universe was formed

According to the Law of Germination. I am sorry ....

 First Law of Germination...

 Non living particles cannot give birth to a living thing....

 All the living being was came from the Life.. (Supreme Eternal Life) not from atoms.

 Skin may be made up of atoms, cell and molecule.. but what about life and emotions?

 What is the Atomic number for love?

 What is the Atomic number for angry?

 What are all the molecules involved in Faith, Believing and Trust?????

 It is all came from The Life

 Verbs - செயல்கள்

Chemical particles will react with one another... Reactions will take place. But emotions like love, joy ??? Will it produce...

What is behind the actions we do?

Which made the Human to do all activities.... From birth to death???


8. முளைத்தெழுதலின் இரண்டாம் விதி


அன்பு வாசகர்களுக்கு வணக்கம். என்னுடைய இந்த இருபத்தி எட்டு வருடத்தில் எந்த ஒரு செயலையும் தொடர்ச்சியாக செய்ய முற்பட்டதே இல்லை. என்னை அறிந்த நட்புகள் முகத்தில் இதனை படிக்கும் போது புன்னகை மலரும். இருப்பினும் எட்டாவது முறையாக தொடர்ச்சி விட்டுப்போகாமல் நான் செய்யும் ஒரே செயல் இந்த அங்கிள் பவுல் தொடரை எழுதுவது (போன வாரம் வெளியான முதலாம் விதியின் எதிரோலியும் சேர்த்து). என்னுடைய உலகில் இது வரலாற்று சாதனையாகவே நான் கருதுகிறேன். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இதனை படிக்கும் ஓர் குறுகிய வாசகர் கூட்டத்தின் ஆதரவும், சொல்லப்படாத கதைகள் அனைத்தும் தனக்கான ஏற்ற சுழல் வரும்போது மனதிலிருந்து வார்த்தைகளாக முளைத்து எழும் என்கிற இயற்கையின் விதியும் தான். முளைத்து எழும் வார்த்தைகளில் சில எழுத்துப்பிழைகள் வருவது இந்த எட்டாவது தொடரிலும் தவிர்க்க முடியாதது. என்னால் முடிந்த வரை தவறுகளை குறைத்துக்கொள்கிறேன். தவறுகளை தாண்டியும் என்னுடைய கதையை ரசிக்கும் நட்புகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தரும் ஆதரவே என்னை அலாரம் வைத்து எழுப்பிவிடுவது போல கைகளை தர தர வென இழுத்து வந்து எழுத வைக்கிறது. மனமார்ந்த நன்றிகளுடன் எனது கதையை தொடர்கிறேன்.


முளைத்துதெழுதலின் இரண்டாம் விதி.


அன்று மாலை அங்கிளும் சிறுவன் கமலேஷும் மாடியில் ஏறினார்கள். வேலை முடிந்து கமலேஷின் தாயாரும் தந்தையும் வீட்டிற்கு வர வேண்டிய நேரம் அது. தங்களுடைய சீரிய சிந்தனை அவர்களுக்கு இடையூராக இருக்கக்கூடாதே

சீரியல் சத்தமோ, "ஹோம் ஓர்க் எழுதலையா" என்னும் அம்மாவின் அதட்டலோ, செய்திகள் என்னும் பெயரில் நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக்காதல், ஊழல் பட்டியலின் அறிவிப்போ, என உலகின் காரியங்கள் அனைத்தும் இல்லாத இடமாக அந்த மாடி இருந்தது.
கண்களை ஏறேடுத்து பார்த்தபோது ஒட்டுமொத்த நட்சத்திரக்கூட்டமும் தங்கள் காதுகளை தீட்டிவைத்துக்கொண்டு இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என உற்று நோக்குவது போன்று இருந்தது.

அரைமணி நேரம் அங்கிள் எதுவும் பேசாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது கைகளில் பரிசுத்த வேதாகமம் இருந்தது. கமலேஷ் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். சூரியனின் ஒளியை கிரகித்து குளுமையான ஒளியை நிலவு வெளியிடுவது போல நிலவின் ஒளி அங்கிள் முகத்தில் பட்டு மேலும் ரம்மியமான ஒளியாக பிரதிபலித்துக்கொண்டிருந்தது.


இனம் புரியாத அமைதி அங்கு நிலவிக்கொண்டிருக்க, திடீரென தனது மௌனத்தை களைத்தார் அங்கிள் பவுல்.

"புரிந்துகொண்டாயா கமலேஷ்" என்றார்.

"எதை கேட்கிறீர்கள் அங்கிள்? நீங்கள் தான் எதையும் கூறவில்லையே" என்றான் சிறுவன்.


"நான் அரைமணி நேரம் மனதில் நினைத்துக்கொண்டிருந்ததை உன்னால் உணரமுடியவில்லையா கமலேஷ்"

கமலேஷின் முகம் குழப்பத்தில் மூழ்கிபோனது. அங்கிள் மனதில் நினைப்பதை நம்மால் எப்படி உணர முடியும்? அவர் பேசினால் தானே நம்மால் அவர் என்ன நினைத்தார் என புரிந்துக்கொள்ள முடியும்.? என நினைத்துக்கொண்டிருந்தான்.

ஆனால் அங்கிள் மற்றவர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என மனதினை படிப்பதில் வல்லவர்.

கமலேஷின் மனதில் இருந்த சந்தேகத்தை அப்படியே வெளிப்படுத்தி கமலேஷை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் அங்கிள்.


"கவலை வேண்டாம் கமலேஷ். நாம் நேராக முளைத்தெழுதலின் இரண்டாம் விதிக்கு செல்வோம். விதியின் விளக்கத்தை உனக்கு எளிதில் விளங்க வைக்கவே இந்த கேள்வியை முன்னதாக உன்னிடம் கேட்டேன்" என்று இரண்டாம் விதியை தொடர்ந்தார் அவர்.
இரண்டாம் விதி என்னவெனில் :


விதைகள், தனக்கான ஏற்ற சூழல் வரும் போது செடியாக முளைத்து வருவது போல..

சிந்தனைகள், தனக்கான ஏற்ற சூழல் வரும் போது வார்த்தையாக முளைத்து வரும்.


இங்கே விதையும், சிந்தனையையும் ஒப்பிட விரும்புகிறேன். விதை விதையாக இருக்கும் வரை அது யாருக்கும் பயன்படப்போவதில்லை. உயிரற்ற பொருளும் விதையும் பார்பதற்கு ஒன்று போல் இருக்கும். ஆனால் அதற்கான ஏற்ற சூழல் வரும்பொழுதோ விதையில் இருக்கும் ஜீவன் செடியாக வெளிபடத் தொடங்கும்.அதே போல ஒரு சிந்தனை, சிந்தனையாக இருக்கும் வரை அதனால் யாருக்கும் உபயோகம் இல்லை. அது வார்த்தையாக வெளிப்பட வேண்டும். அரைமணி நேரம் நான் யோசித்த விஷயங்களை உன்னிடம் வெளிபடுத்த எனக்கு ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. அது தான் வார்த்தை. வார்த்தை என்னுடைய பேச்சிலே வெளிப்படுகிறது. என்னுடைய பேச்சு நம் இருவருக்கும் பொதுவான மொழியில் பேசப்படுவதால் நீ அதனை எளிதில் புரிந்துக்கொள்கிறாய்.

இங்கே என்னுடைய சிந்தனை வார்த்தையினால் மறு உற்பத்தி செய்யப்படுகிறது" என்றார் அங்கிள்.

"சிந்தனை வார்த்தையினால் மறு உற்பத்தி செய்யப்படுகிறதா.. அது எப்படி அங்கிள்"? என்று கேட்டான் கமலேஷ்.

"ஆமாம். என்னுடைய சிந்தனை வார்தையாக வெளிபட்டு அதனை கேட்கும் உன்னுடைய மனதில் ஒரு சிந்தனையாக புதைக்கப்படுகிறது, புதைக்கப்பட்ட அந்த சிந்தனையுடன் நீ முழுவதுமாக ஒற்று போகும் போது, அந்த சிந்தனையை நீ வார்த்தையினால் மற்றவர்களுக்கு அறிவிக்கிறாய். இப்படியே சிந்தனைகள் வார்த்தையினால் மறு உற்பத்தி செய்யபடுகிறது" என்ன விளக்கம் தந்தார் அங்கிள்.

வியந்து போனான் அந்த சிறுவன். இப்படி ஒரு காரியத்தை அவன் வேறு எங்கும் கேள்விபட்டதே இல்லை. அவனுக்கு அவர் கூறுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருந்தது.


"ஒரு அதிகாரி அடுத்து நடக்க வேண்டிய வேலைகளை தனது மனதில் திட்டமிடுவார்.

அந்த திட்டங்கள் மனதில் இருக்கும் வரை வேலைகள் நடைபெறாது, அது வார்த்தையாக வெளிபட்டு தனக்கு கீழே வேலை செய்பவர்களிடம் சென்றடைய வேண்டும் அப்பொழுது தான் வேலை நடைபெறும்"

"வார்த்தை ஜீவனுள்ள சிந்தனையின் வெளிப்பாடு" என்று மேலும் தொடர்ந்தார் அங்கிள்.

"Seven habits of Highly effective people என்கிற புத்தகத்தில் Stephan covey இவ்வாறு கூறியிருப்பார்.
எந்த ஒரு பொருளும் இரண்டு முறை உருவாக்கப்படுகின்றன.

நாம் நின்று கொண்டிருக்கக்கூடிய இந்த வீடு உருவாக்கப்படும் முன்னர் இது இஞ்சினீயரின் ப்ளு பிரிண்டில் உருவாக்கப்பட்டது.

ஓவியர் ஒரு ஓவியம் வரையும் முன்னர் அதே ஓவியத்தை அவர் சிந்தனையில் வரைந்திருப்பார்.

ஒரு சிற்பி சிற்பத்தை வடிவமைக்கப்படும் முன்னரே அந்த சிற்பத்தை தனது சிந்தையில் வடிவமைத்திருப்பார்.

எனவே எந்த ஒரு பொருளும் இரண்டு முறை உருவாக்கப்படுகின்றன. அதே போல தான் இந்த உலகமும், வானங்களும், அண்டங்களும் இரண்டு முறை உருவாக்கப்பட்டன" என்றார் அவர்


Science இல் இருந்து Super Science நோக்கி அங்கிள் சென்றுவிட்டார் என சிறுவன் புரிந்து கொண்டு தனது காதுகளையும், மனதையும் மேலும் கூர்மையாக்கினான். நட்சத்திரங்களின் பிரைட்னஸ் ஒரு புள்ளி அதிகரித்தது.

இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தார் அங்கிள்.

"கடவுள் நம்பிக்கை உள்ள எவரும் இந்த உலகம், கோள்கள் பேரண்டங்கள் அனைத்தையும் கடவுள் தான் உண்டாக்கினார் என ஒப்புக்கொள்வார்கள், இல்லையா கமலேஷ்"? என்று கேட்டார் அவர்.

"ஆமாம் அங்கிள். நானும் கூட ஒப்புக்கொள்கிறேன்" என்றான் கமலேஷ்.

கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைக்கும் முன்னர் இந்த பிரபஞ்சம் அவருடைய சிந்தனையில் இருந்திருக்கும். இந்த கோள்கள், பூமி அனைத்தும் அவருடைய சிந்தனையில் முதலில் உண்டாக்கப்பட்டிருக்கும்.

கடவுளை இந்த நிலையில் ஜீவன் (The Life) என்று குறிப்பிட்டோம் அல்லவா?


இந்த ஜீவனை இப்பொழுது Creator சிருஷ்டிகர் என அழைக்க விரும்புகிறேன். ஏனெனில் Creation, invention மற்றும் Discovery க்கான வித்தியாசத்தை நீ முதலில் அறிய வேண்டும்.


Discovery : மற்றவர்களால் கண்டறியப்படாத அல்லது உணரப்படாத ஏதோ ஒரு பொருளை முதன் முதலாக கண்டபிடித்துக் கூறுவது. நியூட்டன் பூவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்கும் முன்னரே பூவியீர்ப்புவிசைஉலகத்தில் இருந்ததல்லவா? ஆனால் அதனை யாரும் கண்டறியவில்லை.

நியூட்டன் தான் முதலில் கண்டறிந்தார். இது Discovery.

Invention :  கண்டுபிடிப்பு. ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி என்கிறோமல்லவா. அவர் ரேடியோவை கண்டுபிடிக்கும் முன்னர் அப்படி ஒரு சாதனம் இல்லை. ஏற்கனவே இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலப்பொருட்களை (Raw products) கொண்டு ஒரு புதிய பொருளை அல்லது சாதனத்தை உருவாக்குதல். ரேடியோவை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் மார்கோனி பிறக்கும் முன்பே இந்த உலகில் இருந்தது. ஆனால் அவற்றை வைத்து மார்கோனி ரேடியோவை உண்டாக்க முயற்சி செய்தது போல அவருடைய முன்னோர்கள் யாரும் யோசித்துக்கூட பார்க்கவில்லை. இது Invention . Invention க்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலப்பொருட்கள் தேவை.

Creation : படைத்தல் அல்லது சிருஷ்டித்தல்

உண்மையான Creation க்கு இரண்டு அல்லது மூன்று மூலப்பொருட்கள் எல்லாம் தேவையே இல்லை. இதுவரை தோன்றிராத சிந்தனைகளை Creativity என்று அழைக்கிறோம் அல்லவா? பல புத்தகங்களை படித்து அதன் மூலம் வரும் ஞானத்தை creativity என்று நாம் அழைப்பதில்லை.

நம்முடைய Creator ம் அப்படித்தான் அண்டங்களையோ கோள்களையோ நட்சத்திரங்களையோ உருவாக்க அவருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலப் பொருட்கள் தேவைப்படவில்லை. அப்படி பல பொருட்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து அவர் உலகத்தை உண்டாக்கி இருந்தால் அதற்கு பேர் invention ஆகியிருக்கும்.


God invented the Earth என்று யாரும் சொல்வதில்லையே. God created the Earth என்று தான் தெய்வ பக்தி உள்ள எவரும் கூறுவர்.

அவருடைய இந்த creativity அவருடைய சிந்தனையில் தான் முதலில் தோன்றியிருக்கும். ஒரு engineer முதலில் வரையும் ப்ளு பிரிண்டை போல. அவருடைய Blue Print ல் நாம் காணும் நட்சத்திரம் இருந்திருக்கும், கிரங்கள் இருந்திருக்கும், இந்த உலகில் உள்ள மலைகள், நதிகள் இவை யாவும் கூட இருந்திருக்கும்.
சிந்தனையில் இவையாவும் உண்டாக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது அவையாவும் வெளியில் வெளிப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த ஜீவன், சிருஷ்டிகருக்கு தனது சிந்தனையில் (creativity) உள்ள அனைத்தையும் உண்டாக்க செங்கல், சிமென்ட் என்று எந்த மூலப்பொருட்களும் இல்லை.


தனது சிந்தனையில் உள்ளவற்றை வெளிப்படுத்த அந்த நேரத்தில் அவரிடம் இருந்த ஒரே மூலப்பொருள் என்ன தெரியுமா??? "வார்த்தை"

சிந்தனை வார்தையாக வெளிப்படுதல். தேவன் வானத்தையும் பூமியையும் தனது வார்த்தையினால் சிருஷ்டித்தார்" என்றார்.


கமலேஷ் பிரமிப்பில் மூழ்கியிருந்தான்.


அவனுக்கு இந்த அரை நிமிடம் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே தெரியவில்லை. ஒரு time machine ல் ஏறி உலகம் உண்டாவதற்கு முன் உள்ள காலத்துக்கே பயணித்தது போல இருந்தது.

அங்கிள் மேலும் தொடர்ந்தார். "போன முதலாம் விதியில் பார்தோமே. ஜீவன் மற்ற ஜீவராசிகளை மறுஉற்பத்தி செய்யும் முன்பு ஜீவவிருட்சம் என்கிற மற்றோரு பரிணாமம் அடைந்தது என்று?! அந்த ஜீவவிருட்சம் என்பது தேவனுடைய வார்த்தை தான்"


"அவர் ஆதியிலே 'வானம் உண்டாகக்கடவது' என்று சொன்ன மறு கனத்தில் வானம் உண்டானது"

"கடவுளின் சிந்தனை கடவுளின் வார்த்தையாக வெளிப்படுதல்.

இதனை வேதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது...


யோவான் 1: 1 to 14


1.ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்

- வேதாகமம்.


அந்த வார்த்தை, அதே வார்த்தை மாம்சமாகி (மனித சரீரத்தில்) நம்மிடையே வந்தார். ஆனால் நாமோ அவரை சிலுவையில் அறைந்தோம். ஆனால் அந்த வார்த்தைக்குள் ஜீவன் இருந்ததால் மண்ணில் புதைக்கப்பட்ட விதையைப் போல மூன்றாம் நாளிலே அவர் உயிர்தெழுந்தார். இன்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்" என்றார்.

"நம்முடன் வாழ்கிறார் என்றால் நம்முடன் பேசுவாரா அங்கிள்" என்று ஆர்வமுடன் கேட்டான் குட்டி கமலேஷ்.


"ஏன் நீ இதுவரை அவரிடம் பேசியதே இல்லையா கமலேஷ்" என்றார் அங்கிள்.


"இல்லையே அங்கிள்! எனக்கு அவரை அறிமுகபடுத்துவீர்களா" என்றான் கமலேஷ் அப்பாவிதனமாக.

"கமலேஷ். நான் இவ்வளவு நாள் உன்னுடன் இருந்தும் நீ என்னை அறியாமல் இருக்கிறாயா"? என்றார்

"அங்கிள்"?????? என்றான் சந்தேகத்துடன்

"உன்னுடன் பேசுகிற நானே அவர்" என்றார் மெல்லிய குரலில்...."கமலேஷ் கமலேஷ்" என்று மாடிப்படிகளில் ஏறிவருகிற அவனது தாயின் குரல் கேட்டது.

அருகே வந்த அவனது அம்மா"கமலேஷ் தனியா என்ன பன்ற? இருட்டுல கையில பைபிளோட"? "வா கீழே போலாம் சாப்பிட நேரம் ஆச்சுல்ல" என்றபடி அவனது கைகளை பிடித்து கீழே அழைத்துச் சென்றார்கள்.


தொடரவே தொடரும்....

2. அன்பு சோதனை


  1. பரிசோதனையின் நோக்கம்:


அன்பு சோதனை எழுத சிறிது தாமதமாயிற்று. வேலை பழுவோ வேறு வெங்காயங்களோ காரணம் அல்ல. மூன்று நாட்கள் முன்பு, அன்பு சோதனை பற்றி எழுதும் தகுதி எனக்கு உள்ளதா என்றறிய "அன்பு" எனக்கு வைத்த சோதனையில் தோற்றுவிட்டேன். சோதனையில் தோற்றாலும் அன்பின் தயவினால் உங்களுடன் சேர்ந்து அன்பு சோதனையை மேற்கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.


ஏன் அன்பு சோதனை? சத்திய சோதனைக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா?


இதனை ஒரு கவுண்டமணி - செந்தில் நகைச்சுவையிலிருந்து ஆரம்பிக்க ஆசைபடுகிறேன்.

கவுண்டமணி : டேய் தகப்பா! இது நியாயமா? இது உனக்கே அடுக்குமாடா?

செந்தில் : என்ன பண்றது மை சன்? விதி விளையாடிடுச்சு?!

கவுண்டமணி: டேய் நாயே நீ விளையாண்டு போட்டு விதி மேல ஏன்டா பழிய போட்ற?
இந்த நகைச்சுவையை ஞாபகப்படுத்தி பார்க்ககூடியவர்கள் முகத்தில் சிரிப்பலைகள் ததும்புவதை யாராலும் தடுக்கமுடியாது.இங்கே செந்தில் கூறியதை போல நிறைய பேர் கூறுவதை நாம் வாழ்கையில் கேள்வி பட்டிருப்போம். அதாவது எதிர்பாராமல் நடக்கும் சில சோக காரியங்களை "விதி விளையாண்டுவிட்டது" என்ற வழக்கில் கூறுவதுண்டு. விதி என்கிற காரியம் உண்மையில் இருக்கிறதா???


கண்டிப்பாக இருக்கிறது. என்னடா அன்பு சோதனை என்று தலைப்பை போட்டுவிட்டு இவன் விதியை பற்றி பேச போகிறானே! என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு சில படங்களில் Hero வை அறிமுகப்படுத்தும் முன்பு Villan ஐ தான் அறிமுப்படுத்துவார்கள். பார்த்திருக்கிறீர்களா? Villan எவ்வளவு கொடுரமானவன் என்பதை தான் முதல் காட்சியில் காட்டுவார்கள். ஏனெனில் அப்பொழுது தான் Hero வின் தேவை நமக்கு விளங்கும். இந்த வில்லனிடமிருந்து உலகை காப்பற்ற யாரால் முடியும் என நாம் ஏங்கும் தருவாயில் ஹீரோ காட்சியில் தோன்றுவார். அவரை பார்த்த பிறகு பார்வையாளர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். வில்லனிடமிருந்து இந்த உலகை எவ்வாறு கதாநாயகன் மீட்கிறார் என்கிற சுவாரஸ்யத்துடன் கதை நகரும். கதாநாயகன் என்பவர் யாரையிருந்தாலும் சரி அவர் ஒரு சூப்பர்மேனாக இருக்கலாம் அல்லது ஸ்பைடர்மேனாக இருக்கலாம், வில்லனற்ற ஒரு ஹீரோ நமது பார்வையில் ஒரு டம்மி பீஸாகத்தான் தெரிவார். ஹீரோக்களின் ஹீரோயிசம் வெளிப்பட சில வில்லன்கள் தேவை, அல்லது மிகவும் சக்திவாய்ந்த ஒரு மிகப்பெரிய வில்லன் தேவை.


இங்கே நமது வில்லனாக "விதியை" எடுத்துக்கொள்கிறேன் அது என்ன விதி? "நாம் எதை விதைகிறோமோ அதை தான் அறுக்கப்போகிறோம்" தக்காளி விதைவிதைத்தால் அதிலிருந்து பப்பாளி பழங்கள் வருவதில்லை. நாம் நன்மையை விதைத்தால் நன்மையை அறுப்போம். தீமையை விதைத்தால் தீமையை அறுப்போம். (இதனை முளைத்தெழுதலின் மூன்றாம் விதி என்று கூட கூறலாம்) சில நேரங்களில் நம் மூதாதையர் விதைத்த தவறுகளை நாம் சாபமாக அறுக்கிறோம்.

இது உண்மையா?? முற்றிலும் உண்மையே. பிறப்பால் நான் ஒரு சைவ குடும்பத்தை சார்ந்தவன். விதிக்கு இந்து மதத்தில் ஒரு அழகான பெயர் உள்ளது "கர்மா". நீ என்ன செய்கிறாயோ அதற்கான பலனை இம்மையிலோ இல்லையென்றால் மறுமையிலோ அடைந்தே தீர வேண்டும்.


உப்பை தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இது எப்படி வில்லன் என கூற முடியும். கர்மா ஹீரோ தானே? என்று கேட்கலாம். தான் எந்த தவறும் செய்ய வில்லை என்று தனக்குத்தானே நினைத்துக் கொள்பவர்களும் மற்றவருடைய தவறுகளை மட்டுமே பார்த்துக்கொண்டு over confidence ல் தன்னுடைய தவறுகளை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுபவர்களுக்கு வேண்டுமானால் கர்மா ஒரு ஹீரோவாக தெரியலாம். இப்படி பட்டவர்களுடைய வாழ்கையில் விதி விளையாடும் வரை கர்மா ஒரு ஹீரோவாக தான் தெரியும். தன்னுடைய தவறுகளை நன்கு உணரந்தவர்களுக்கு "கர்மா" ஒரு வில்லன். நீங்கள் செய்தது தவறு என்று நன்கு உணர்ந்து திருந்திய பிறகும் "அதலாம் முடியாது... நீ திருந்திட்டியா இல்லையானு அப்பறம் பார்த்துக்கலாம், இதுவரைக்கும் நீ பண்ணதுக்கு வந்து என் கிட்ட வாங்கிட்டு போ, கைய நீட்டு" என்று கர்மா சொல்லுமாயின், என்னை பொருத்தவரை கர்மா ஒரு வில்லனே.

"நான் செஞ்ச தப்புக்கு இந்த தண்டனை ரொம்ப அதிகம்" என்று கடவுளிடம் நான் கதறி அழும்போது, "கடவுள் கிட்ட போனா மட்டும்?????? உன் முப்பாட்டன் மூன்னு பேர கற்பழிச்சிட்டான் அதையும் சேத்து நீ வாங்கிக்கோ" என்று கர்மா கூறினால், என்னை பொருத்த வரை கர்மா ஒரு வில்லனே. இங்கே தான் தெய்வ பக்தி உள்ளவர்களும் கூட கடவுளையும் கர்மாவையும் ஒன்று என  நினைத்து குழப்பிக்கொள்கிறார்கள். கடவுளால் உண்டாக்கப்பட்ட விதி "கர்மா". ஆனால் கர்மா கடவுள் அல்ல.

கடவுள் ஏன் கர்மாவை உண்டாக்க வேண்டும்? எந்திரன் படத்தில் டாக்டர் வஷிகரன் ஏன் சிட்டி ரோபாட் ஐ உருவாக்க வேண்டும்? நன்றாக இருந்த சிட்டி, ரேட் சிப் போடப்பபட்ட பின் நல்லவர்களையும் சேர்த்து பழிவாங்கியதாக கதையில் காண்பித்திருப்பார்கள்.
கடவுள் தன்னுடைய வேலையை manual ஆகவும் செய்யலாம், அல்லது ஒரு Automatic program ஒன்றை உருவாக்கி அதன் மூலமும் முடித்துக்கொள்ளலாம். அவரை நாம் கேள்வி கேட்க முடியாது. அவர் எஜமான். நாம் அவரை சேவிக்க உண்டாக்கப்பட்ட வேலையாட்கள். நமக்கான, நமது செயலுக்கான ஊதியத்தை நாம் பெற்றுக்கொள்ள உண்டாக்கப்பட்ட H.R manager (Automatic Program) தான் "Karma"

சிரியாவில் சிறுவர்கள் சாகிறார்கள் இந்தோனேஷியாவில் அப்பாவி மக்கள் சுனாமில் அழிகிறார்கள்.

"நீங்கள் மட்டும் இயற்கைவளங்களை அழிப்பதில்லையா"? என்று கர்மா கேட்கிறது.

"நீ காப்பரை எடுத்தாய் அதானால் கேன்சரை கொடுத்தேன்" என்கிறது கர்மா.


"என்னயா இது வல்லரசு நாடுகள் பண்ற தப்புக்கு நாங்க ஏன் தண்டனைய அனுபவிக்கனும்" என்று முறையிட்டால். "Sorry. System cannot answer. Please enter valid questions" என்று கூலாக error message உடன் பதிலளிக்கிறது கர்மா. "உன் இடத்தில் பெட்ரோல் எடுத்தால் அதனை எதிர்ப்பாய்? வேறொறு இடத்திலிருந்து பெட்ரோல் எடுத்துக்கொடுத்தால் அதனை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வாயோ"? என வினவுகிறது கர்மா. "உன்னுடைய இடத்தில் யாரும் தண்ணீர் எடுக்கக்கூடாது ஏனெனில் உன் இடத்தில் பயிர்கள் மூன்று போகம் செல்வ செழிப்புடன் விளைய  வேண்டும், ஆனால் மற்றோரு இடத்தில் பூமியை துளையிட்டு தண்ணீரை உறுஞ்சி எடுத்து பாட்டிலில் அடைத்துக் கொடுத்தால், 'கூலிங்கா இருக்கா'? என்று கேட்டு வாங்கி குடிப்பாயோ"? " நீ முதலில் உத்தமனாக நடந்து கொண்டு பிறகு என்னிடம் வந்து கேள்வி கேள்" என்றுரைக்கிறது கர்மா


எங்கே? கர்மாவை ஹீரோவாக நினைத்தவர்கள் கையை தூக்குங்கள் பார்போம். அப்போ இப்படியே போனா என்ன அர்த்தம்?. வல்லரசு நாடுகள் பேராசையினால பெட்ரோல் எடுக்கிறான் , மீத்தேன் எடுத்துக்கிறேன்னு சொல்றான். ஹைட்ரோ கார்பன் எடுப்பான்அவர்கள் எடுப்பதை நாமும் பயன்படுத்தத் தான் செய்கிறோம். அதே நேரத்துல உலகத்துல ஏதோ ஒரு மூளையில் மக்கள் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகிறார்கள்.கர்மாவின் கண்களுக்கு உலக உருண்டையில் அமெரிக்காவும் தெரியாது ஐரோப்பாவும் தெரியாது, அதன் கண்களில் அனைவரும் மனித இனம். மனித இனம் எதை விதைக்கிறதோ அதை தான் அவர்கள் அறுவடை செய்ய வேண்டும். கர்மாவின் சக்தி இதுவே.

.

.

.

.

அப்போ உலகம் அழிஞ்சிடுமா?

.

.

.

.

.

பாஸ்.. ஒரு நிமிஷம் பொறுங்க?! வில்லன்னு ஒருத்தர் இருந்தா... ஹீரோனு ஒருத்தர் இருக்கனும் இல்ல??? அப்படிதானே?????


ஹீரோவ கண்டுபுடிச்சுட்டேன். எஸ்.... "யாரு ஹீரோ"...???

.

.

.

"அன்பு" தான்.

.

.

.

.

அடஆமாம்பா. அடிச்சு சொல்றேன். கர்மா'வை எதிர்த்து போராடி நம்மள காப்பாற்றுகிற சக்தி "அன்பு" கிட்ட மட்டும் தாங்க இருக்கு. என்னுடைய வாழ்கையில் நான் பார்த்த சாட்சி.


என்னுடைய இயலாமையால் நான் செய்யும் தவறுகளுக்கு எதிராக விதி விளையாடும் போதெல்லாம் எனக்கு சாதகமாக அன்பு விளையாடும். முடிவில் அன்பே வெல்லும்.

விதியை மதியால் வெல்லலாம் என சிலர் கூறுவதுண்டு. என்னை பொருத்தமட்டில் மதியினால் விதியின் விளைவுகளை தள்ளி தான் போடமுடியும், முற்றிலுமாக வெல்ல முடியாது. "பாவத்தின் சம்பளம் மரணம்" என்கிறார் நமது கடவுளின் H.R manager Mr.Karma. மதியினால் மரணத்தை தள்ளி போட முடியும். மரணத்திலிருந்து தப்பிக்க முடியுமா?. அன்பினால் மரணத்தையும் வெல்ல முடியும், மரணத்திற்கு காரணமான பாவத்திலிருந்தும் விடுதலை அளிக்க முடியும் என்பதை தான் நாம் பரிசோதித்து பார்க்கப்போகிறோம்


நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுவராக இருந்தாலும் சரி, உங்கள் மதத்தின்  கருத்து என்ன? "அன்பு" தானே?

"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே" என்று நான் படித்த வள்ளலார் பள்ளியின் பிராத்தனை கூட்டத்தில் ஒரு பாடல் வருவதுண்டு.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றார் வள்ளுவர்.


அப்படிபட்ட அன்பு இந்த உலகை அழிவிழிருந்து மீட்குமா???? நாம் குருட்டாம் போக்குடன் நம்பிவிட வேண்டாம். விதிக்கு எதிராக நம் அன்பை களத்தில் இறக்கும் முன்னர் எதற்கும் நமது அன்பினை பரிசோதனை செய்து பார்த்துவிடுவோம்.


அன்பு சோதனைக்கு தேவையான பொருட்கள்:

குழந்தையை போல கற்றுக்கொள்ளும் ஆர்வம் - தேவையான அளவு.

பைத்தியக்காரத்தனம் (craziness) ஒரு தேக்கரண்டி.

(தன்னை அறிவாளிகள் என நினைத்து கொள்பவர்கள் அன்பினை கடுகளவும் உணர முடியாது)


Butterflies are mentally mental so is love

-Alphonse putharen


இனி நம் கமலேஷ், கமலேஷின் பெற்றோர், தாத்தா, காவியா, ரம்யா (இதற்கு முன் குறிப்பிடப்படாத ஒரு முக்கியமான கேரக்ட்டர், இனி கதையில் வரலாம்) அனிதா, கார்திக், நரேன், சாய் சதீஸ், நிரஞ்சனா இன்னும் சிலர் இவர்களுடன் உங்கள் அபிமான அங்கிள் பவுலுடன் கதையும் அன்பு சோதனையும் தொடரும்.

2. முதல் காதல் உருவான கதை

கடந்த மூன்று நான்கு வாரங்களாக வெறும் விதிகளை பற்றி மட்டுமே பேசி கதையில் வைத்த சஸ்பென்ஸ்ஸுகளை கிடப்பிலே போட்டுவிட்டேன். இந்த தொடரை தொடர்ச்சியாக படித்து எனக்கு சிறந்த மற்றும் நேர்மையான விமர்சனங்களை வழங்கி வரும் எனது சகோதரி சரண்யா கூட "நீங்கள் தொடர்ச்சியாக வைத்து வந்த சஸ்பென்ஸ்ஸுகளை வெளிப்படுத்தும் உத்தேசம் இருக்கிறதா"? என்று வினவினார்கள். விதிகள் பற்றி அதனை படித்த அனைவரிடமிருந்தும் நல்ல அபிப்பராயம் கிடைத்துள்ளது. நன்றிகள்! விதிகள் எப்பொழுதுமே தானா உருவாகிக் கொள்வதில்லை. சட்டம் என்று ஒன்று இருப்பின் அந்த சட்டத்தை ஒருவாக்கியவர் ஒருவர் கண்டிப்பாக இருக்கத்தான் வேண்டும்
Law and Law maker. கதையின் முடிவில் விளக்குகிறேன். இப்பொழுது நாம் நேரே கதைக்கு சென்றுவிடுவோம்.


2008 பழ தோட்டத்தில் அமர்ந்து இந்த விதிகளை சிந்தித்து கொண்டிருந்த 

கமலேஷ் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்திருந்தான். பல நாட்களாக மண்ணில் புதைக்கப்பட்ட புதையல்களை தூசி தட்டி வெளியே எடுத்தது போல் இருந்தது. இதனை யாரிடமாவது வெளிபடுத்த வேண்டுமென்று தோன்றியது கமலேஷிற்கு. ஆனால் இதை காது கொடுத்து கவனிக்கும் கூட்டம் அவனை சுற்றி இல்லை. அதுமட்டுமல்லாமல் யார் உனக்கு இதனை சொல்லிகொடுத்தது என்று யாராவது கேட்டால், சொல்லிகொடுத்தவரை பற்றி எடுத்துரைக்கும் பக்குவமும் கமலேஷிடம் அப்பொழுது இல்லாதிருந்தது. மற்றொரு சமயம் வரும் பொழுது கண்டிப்பாக இதனை நிறைய பேருக்கு எடுத்துரைக்க வேண்டும் என மனதில் உறுதி கொண்டான் கமலேஷ். மனதினை மாற்றி தட்டுத்தடுமாறி ஒரு வழியாக நிகழ்காலத்திற்கு வந்தடைந்தான் அவன். இப்பொழுது அவனது முழு குறிக்கோளும் presentation ஐ நல்லபடியாக முடிக்க வேண்டும்


(குறிப்பு : கதையில் இதுவும் ஒரு flashback என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்)கடுமையாக குறிப்புகளை எடுத்து slides அமைத்தான் கமலேஷ். ஒரு சனிக்கிழமை அன்று, வகுப்புகள் முடிந்த பிறகு தன்னுடைய மடிகணினியில் இருந்த presentation ஐ காவியாவிடம் காட்டிக்கொண்டிருந்தான்.

"Slides ரொம்ப perfect'ஆ இருக்கு கமலேஷ்" என்றாள் காவியா

அவளது கண்ணை பார்க்காமல் இருக்க தன்னால் முடிந்தவரை போராடி கொண்டிருந்தான் அவன்.

"Thanks காவியா... நம்ம சீனியர் சுரேஷ் சார் தான் நிறைய டிப்ஸ் கொடுத்தாரு
அக்ச்சுவலா அவருக்கு பயங்கரமான presentation ski"...... என்று கூறிக்கொண்டே எதர்ச்சையாக காவியாவின் கண்களை பார்த்துவிட்ட கமலேஷுக்கு வார்த்தைகள் திணற ஆரம்பித்தன.

தன்னையே கூர்மையாக உற்று நோக்கிகொண்டிருக்கும் நீல நிற கண்கள். தனது சத்தமில்லாத சாதுவான பேச்சையும் தலையை ஆட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கும் அழகிய முகம், வாழ்க்கை முழுக்க தனக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் தோன்றியது அவனுக்கு.

அடுத்த இரண்டு மூன்று நிமிடங்கள் அவனுடைய அந்த திடீர் எண்ணம் மனம் முழுக்க, மூளை முழுக்க, இதயம் முழுக்க, ஏன் உடல் முழுக்க அதி வேகமாக பரவ தொடங்கியது. பரவிய அந்த எண்ணம் அவனுடைய ஒட்டுமொத்த உறுப்புக்களின் ஒப்புதல் பெற்று ஒரே முடிவாக மூளையில் அமலானது. "நான் என் எதிரே இருக்கும் இந்த பெண்ணை காதலிக்க போவதாக முடிவெடுத்துவிட்டேன்" என மூளை அறிக்கைவிட, அவனது அனைத்து செல்களும் இரத்த அனுக்களும் ஒன்றையோன்று தழுவிக்கொண்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தன.

பிறகு என்ன? அடுத்தநாள் ஞாயிற்று கிழமையில் பாரதம் விடிதியின் நான்காம் எண் அறையில் "காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்" பாடல் முப்பத்தி நான்காவது முறையாக கமலேஷின் மடிகணினியில் ஓடிக்கொண்டிருந்தது. வெளியிலிருந்து யாரோ கதவை தட்ட, பாட்டை pause செய்து விட்டு கதவை திறந்தான் கமலேஷ். வேறொறு பாடல் புதிதாக அந்த அறைக்குள் நுழைந்தது. "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல; அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வேத்தல" என்று தனது கைபேசியில் ஒலித்த பாடலோடு சோக நடனம் ஆடிக்கொண்டே உள்ளே வந்தான் நரேன்
"புட்டுக்கிச்சோ"? என்று நினைத்துக் கொண்ட கமலேஷ், நமக்கு எதுக்கு வம்பு என எதுவும் கேட்காமல் மடி கணினி முன் உட்கார்ந்து presentation போடுவது போல பாவனை செய்து கொண்டிருந்தான். "காதல் தோல்வி எப்படி சாத்தியமாகும்? காதலிச்சு தோத்தா தானே அது காதல் தோல்வி? என்னவோ காமெடி பண்றாங்கஎண்ணங்கள் கமலேஷ் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.

கமலேஷ் தன்னிடம் எதாவது கேட்க வேண்டும் என்பதற்காகவே பாட்டின் நடு நடுவிலே "என் அஞ்சல மச்சான் அவோ"! என்கிற வசனத்தையும் அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருந்தான் நரேன்
கமலேஷ் எதுவும் கண்டுக்கொள்ளாததால், "மச்சான்" என்று கூப்பிட்டான் நரேன்!
"என்ன மச்சி" என்றான் கமலேஷ்
"என் அஞ்சல மச்சான் அவோ" என்று மறுபடியும் அழுவது போல கூறினான் நரேன்


இதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்று கமலேஷிற்கு தெரியவில்லை
"அழுவுறான் ஆனா கடைசி வரைக்கும் கண்ணுல தண்ணி வரலயே" என்று யோசித்த கமலேஷ் இதனை கூறி அவன் மனதை மேலும் புண்படுத்த விரும்பவில்லை


ஏதும் பேசாமல் மீண்டும் மடி கணினியில் கமலேஷ் மூழ்க., "என்ன மச்சி நான் இவ்வளவு ஃபீல் பண்ணி பாடிட்கிட்டுருக்கேன், அப்படி என்னத்த தான் நீ பாத்துகிட்டு இருக்க" என்றபடி சடார் என வந்த நரேனின் கண்களுக்கு, கமலேஷ் மடி கணினியில் வால்பேப்பராக இருந்த காதல் வசனங்களும் ஹார்டீனும் தென்பட்டுவிட்டது
தான் சோகத்தில் இருக்கவேண்டும் என்கிற தற்காலிக சுய மனக்கட்டுப்பாட்டை இழந்த நரேன் மிகவும் ஆச்சரியத்துடன் "டேய் ஃபிராடு பயலே, நல்ல பையன் மாதிரி ஊரையா ஏமாத்துற, யாரு மச்சி அது"? என வினவினான்.

"ஐயையோ நீ தப்பா புரிஞ்சிகிட்ட மச்சி" "Love னா அன்பு, காதல் இல்ல" என்று ஏதேதோ சொல்லி சாமாளித்து பார்த்தவனின் சாமாளிப்புகள் ஏதும் எடுபட வில்லை."நாளைக்கு உனக்கு Enquiry" என்று சொல்லிவிட்டு மீண்டும் சோகப்பாட்டில் மூழ்கினான் நரேன். இப்படி மாட்டிகிட்டோமே என கதிகலங்கிய கமலேஷ், சரி உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வந்து தானே ஆக வேண்டும் என மனதை தெற்றிக்கொண்டான். என்னதான் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு முதலில் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றும் யோசித்தான். பரவாயில்லை நாளை என்ன தான் நடக்கிறது என்று பார்போமே என்கிற காதல் தந்த துணிச்சலுடன் Enquiry க்கு தயாரானான் அவன்.

அடுத்த நாள் திட்டமிட்டபடியே enquiry நடந்தது. (முன்னமே கூறிய காட்சியை வாசகர்களுக்காக மற்றுமொரு முறை) குற்றவாளி கூண்டில் கமலேஷ். விசாரனை நடத்துபவர்கள், கார்த்திக், நரேன், சாய், நிரஞ்சனா.


கார்த்திக்:  சொல்லுடா... சொல்லிரு ... 
நரேன்ஆமா மச்சி ... இனி மறைச்சி என்னாக போகுது?..
சாய்விடுங்கடா பையன் ரொம்ப தான் வெக்கப்பட்றான்!
கமலேஷ்அப்படிலாம் ஒன்னும் இல்ல... இதுல என்ன வெக்கம்.?
நிரஞ்சனா அப்போ யார love பன்றேன்னு சொல்லு.....friends கிட்ட சொல்லமாட்டியா??
நரேன் மச்சி நம்ப எல்லாம் அவன் friends'eh இல்ல போல... அதான் சொல்லமாடேங்கிறான்.

(இந்த முறை, தான் காதலிக்கும் நபரை அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை கமலேஷிற்கு)

கமலேஷ் சரி சொல்லிட்றேன்... அது வேற யாரும் இல்ல....

(அனைவரும் தங்கள் காதுகளை கூர்மையாக்கி கொண்டனர்)


(30 வினாடி மௌனத்திற்கு பிறகு, தலை குனிந்த நிலையில், மெல்லிய குரலில் கமலேஷ் தொடர்ந்தான்)
.
.
.
.
.
.

"காவியா"

"அடபோங்கடா" என்று சலித்துக்கொண்டு சோகத்தில் சாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.

அப்படியென்றால் கல்லூரியின் முதல் நாளில் சதீஸ் கூறிய 'பஸ்ட் ரோல ப்ளு' காவியா தானோ? எனப்புலப்பட்டது கமலேஷிற்கு. ஏனெனில் அன்று அவளது "ர் ஒலியில்லா Sir"குரல் முதல் வரிசையிலிருந்து தான் வந்தது.

மற்ற அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். கைகொடுத்து வாழ்த்தும் தெருவித்தனர்
"கேடி.... வெயிட் காட்டுற" என்றான் கார்திக்
"செம ஜோடி. செம selection டா கமலேஷ்" என்றாள் நிரஞ்சனா.
"போட்றா மச்சி.. இப்போவே போயிட்டு நான் அந்த புள்ளைகிட்ட இதை பற்றி பேசுறேன்" என்றான் நரேன்.
"ஒன்னும் வேண்டாம் நானே பார்த்துக்கிறேன்" என்பது போல கைகளை கூப்பி வணக்கத்தை தெரிவித்தான் கமலேஷ்.
வெளியே சென்ற சாய் சதீஸும் மனதை தேற்றிக்கொண்டு மறுபடி வந்து கமலேஷிற்கு கைக்கொடுத்தான்.

"நல்லா இருடா மச்சி. பட் ஒரு சின்ன அட்வைஸ்.. லைஃப்ல எதையும் சீரியஸா மட்டும் எடுத்துக்காத" என்றான்
சாய் சதீஸின் வார்த்தைகளை அலச்சிப்படுத்திய கமலேஷ், தன் காதலுக்கு சாதகமான மற்றவர்கள் தந்த உற்சாக வார்த்தைகளை மட்டும் மனதில் ஏற்றிக்கொண்டான்.

அதே நேரத்தில் "நம்ம கிளாஸ் புள்ள பூச்சி ஒரு பொண்ண காதலிக்குது" என்கிற உண்மை வதந்தியும் பெண்கள் மத்தியில் வேகமாக பரவியது. ஆனால் பெயரை யாரும் குறிபிடவில்லை.

Presentation கொடுக்கும் நாளும் வந்தது. கமலேஷும் காவியாவும் தயாராக இருந்தார்கள்.கதை தொடரும்......

3. அன்பு vs காதல்

சிந்தனைகள் வெளிவர தயங்கிகொண்டிருக்கும் ஒரு காலை வேளையில் கதையை எழுத தொடங்குகிறேன். ஏப்ரல் 19 இன்று, எழுத துவங்கும் முன் என்னுடைய தற்பொதைய மன நிலையை சற்று விவரிக்க விழைகிறேன். இந்த மன நிலைக்கும் கதைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றாலும், இனம் புரியாத உணர்வின் சில தருணங்கள் நம்மை உலுக்கி எடுக்கும். ஏதோ ஒரு புரியாத எண்ணம் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டு நம்மை நம்முடைய வேலையை செய்யவிடாமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழல் தான் தற்பொழுது என் மனதில் இருக்கிறது. எண்ணங்களுக்கு ஒரு மொழியுண்டு. Emotions அதன் மொழி எனலாம். அன்பு, பாசம், சந்தோஷம், உற்சாகம், நம்பிக்கை இவையாவும் பாசிடிவ் எமோஷன்ஸ். பயம், கோபம், பகை, எரிச்சல், துக்கம் இவைகள் நெகட்டிவ் எமோஷன்ஸ்எமோஷன்ஸ் எப்பொழுதுமே ஏதோ ஒரு நிகழ்வின் எதிர்வினையாக நம் மனதிலிருந்து உதிக்கும்ஒரு சில எமோஷன்களை எதனால் உண்டானது என்று நம்மால் கூற இயலாது. அது இனம்புரியத சந்தோஷமாக இருக்கலாம் இல்லையெனில் இனம்புரியாத துக்கமாக இருக்கலாம். எனக்கோ அதை துக்கத்தில் சேர்ப்பதா? சந்தோஷத்தில் சேர்ப்பதா? என்னும் இனம்புரியா சந்தேகம். இனம்புரியா இனபுரியா இனம் இனம் என்று மெதுவாக என் உதடு உச்சேரிக்கும் தருவாயில் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன். எனது இனம்புரியா உணர்விற்கான காரணம் நம் தமிழனத்தையும் அதன் தொடக்கம் மற்றும் பரவல் பற்றிய ஒரு நூலின் தாக்கம். குமரிக்கண்டமா? சுமேரியமா? (நான் இதுவரை படித்த நூல்களில் இது ஒரு வித்தியாசமான நூல்) காரணத்தை கண்டிபிடித்துவிட்டால் போதும் எண்ணங்களின் மேல் நமக்கு அதிகாரம் வந்துவிடுகிறது. இனம்புரியாத எமோஷன்கள் எப்போழுதும் நம்மை அதிகாரப்படுத்த நினைக்கும். அதன் இனத்தை அதாவது எண்ணங்களின் மூலக்காரணத்தை நாம் கண்டுபிடித்துவிட்டால் நாம் நம்முடைய எண்ணங்களை ஆண்டுகொள்ளலாம். இதனை ஆங்கிலத்தில்  emotional intelligence என்பார்கள். கதையை எழுத விடமால் என்னை அலைக்கழித்து வந்த எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கதையை தொடர்கிறேன்.


Presentation நடந்து கொண்டிருந்தது. முதல் முறை என்பதால் அனைவருக்குமே பதட்டமாக இருந்தது. Presentation ல் ஆங்கிலத்தில் தான் உரையாற்ற வேண்டும் என்பது அந்த கல்லூரியில் எழுதப்படாத சட்டம். ஆங்கில வழி கல்வி பயின்றவருக்கே சற்று தடுமாற்றத்துடன் தான் பேச முடிந்தது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு கேட்க வேண்டுமா? அவ்வாறு தமிழ் வழியில் பயின்ற நரசிம்மன் மற்றும் சுந்தரேசனை கமலேஷ் மிகவும் நேசித்தான். கமலேஷிற்குள் இருந்த ஏதோ ஒன்று "அவர்களை தனிமையில் விட்டு விடாதே" என்றே கூறிக்கொண்டிருந்தது. தனக்கு நன்கு தெரிந்த விஷயத்தை பிறரிடம் எடுத்துரைக்க, மொழி ஒரு தடை என்றால் அதன் வலி மிக அதிகம். என் நாவிலிருந்து பிறப்பது பழமையான மொழி ஆனால் யார் மதிக்கிறார்கள்? தமிழனே மதிப்பதில்லையே! இன்று நாம் தலையில் வைத்து கொண்டாடும் ஆங்கிலம் பிறக்கும் முன்னரே லத்தீன் தோன்றியது, லத்தீன் தோன்றும் முன்னரே கிரேக்கம் தழைத்தோங்கியது, கிரேக்கம் தழைத்தோங்கும் முன்னரே தமிழில் நூல்கள் வெளிவந்தது. அப்படிபட்ட தமிழ் நரசிம்மன், சுந்தரேசன் வாயிலிருந்து பிறந்தால் வகுப்பில் மெல்லிய நகைப்புகள் ஆங்காங்கே தோன்றி மறையும். வெட்கத்தால் அவர்கள் வாடுவதை எள்ளளவும் ஜீரணிக்கமுடியாமல் தவித்தான் கமலேஷ். பேராசிரியரும் அவர்கள் தமிழில் விளக்கமளிப்பதை ஆதரிக்கவில்லை.


நன்றாக தயாராகி இருந்த கமலேஷ், தனது தமிழ் சகோதரர்கள் அடைந்த துயரத்தில் மனம் வாடி presentation நடுவிலே தடுமாறத்தொடங்கினான். முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியதுஅவனது ஈரம் கலந்த எண்ணம் வார்த்தையாக வெளிப்பட, வாயை விட்டு வந்த குரல் காற்றில் ஆவியாகி எங்கோ மறைந்து போனது. அவனது வாயசைப்பு மட்டுமே அனைவராலும் காணமுடிந்தது. "லௌடர் ப்லீஸ்" என்று பேராசரியரும் ஐந்தாறு முறை அரைக்கூவ வகுப்பில் ஒட்டுமொத்த கண்களும் கமலேஷையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. இரு கண்களை தவிர. அவன் எதிர்பார்த்த அந்த இரு நீல நிற கண்களும் இறுக்கமாக மூடப்பட்டு வாய் ஏதோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது. அந்த முனுமுனுப்பின் சத்தம் அவள் அருகில் இருந்தவருக்கு கூட கேட்க வாய்ப்பில்லை ஆனால் கமலேஷின் இதயத்தில் எதிரோலித்தது. "சொதப்பிறாதே சொதப்பிறாதே" என்று. அந்த முனுமுனுப்பில் ஓர் அழகிருந்தது. ஓர் குழந்தைத்தனம்.


உற்சாகம் அடைந்த கமலேஷ் தான் குறிப்பெடுத்து வைத்திருந்த அனைத்தையும் நினைவில் வரவழைத்து மடமட வென்று பேசத்தொடங்கினான். நல்லபடியாக அவனது பகுதி முடிவடைந்தது. அனைவரும் கைத்தட்டி அவனை உற்சாகப்படுத்தினர். அவனைத்தொடர்ந்து மீதி பாதியை காவியா தொடர்ந்தாள்.
அவளது ஆங்கில நடையில் ஒரு 'இது' இருந்தது. அந்த 'இது' என்ன என்பதை கமலேஷால் விவரிக்க முடியவில்லை. எழுதும் எனக்கும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. கைகளை ஆட்டி ஆட்டி தலையை வலதுபுறமும் இடதுபுறமும் சாய்த்து, வார்த்தைகளை ஏற்ற இரக்கத்துடன் பேசுமழகு கமலேஷின் கண்களுக்கு விருந்தாக இருந்தது. வாசகர்கள் தவறாக நினைக்க வேண்டாம், கமலேஷிற்கும் கலை கண்கள் உண்டு. அதே நேரத்தில் ரசனையற்றவர்கள் அவளது செய்கைகளை கேளிச்சித்திரமாக பார்த்தனர்.


காவியா விதையில்லாமல் தாவர மறுஉற்பத்தி பற்றி தனது குறிப்புகளைக் கூறிக்கொண்டிருந்தாள்Vegetative Propagation through Cuttings, grafting, budding என்று அலசி ஆராய்ந்து அசத்திக்கொண்டிருந்தாள்.

அவளும் தனது பகுதியை முடிக்க வகுப்பில் கரவோஷங்கள் எழுந்தன.

அன்றிலிருந்து நாளுக்கு நாள் காவியா மீது கமலேஷிற்கு ஒரு தலைக் காதல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. காதல் அதிகமாக அதிகமாக possessiveness எனப்படும் உடமைத்தனமும் மிகவும் பலுகி பெருகிற்று. ஆண்கள் காவியாவிடம் பேசுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவில்லை. காரணம் possessiveness எனப்படும் உடைமைத்தனம். தன்னை விட யாரிடமும் காவியா நெருங்கி பேசக் கூடாது என்கிற எண்ணம். ஆனால் காவியா அனைவரையும் தனது நண்பர்களாக மட்டுமே தான் பார்த்தாள் என்பது பின்னொரு நாளிள் தான் அவனுக்கு புரிந்தது.


ஒருமுறை பாரதம் விடுதியில் சுந்தரேசன், நரசிம்மன், நரேன், கமலேஷ் பேசிக்கொண்டிருந்தனர். காவியாவை பற்றி திடீரென பேச்சு வந்தது. காவியாவின் ஆங்கில பேச்சை சுந்தரேசன் கலாய்த்துக் கொண்டிருந்தான். கமலேஷின் முகமாறுதல் இன்னமும் அவர்களை ஊக்கப்படுத்தியது. சிவந்த முகத்துடன் பொறுமையிழந்த கமலேஷ் சுந்தரேன் மீது பாய்ந்து அவனை தாக்கத்தொடங்கினான். திரும்பி தாக்கும் வலிமை சுந்தரேசனிடம் இருந்தும் அவன் அதை செய்யவில்லை, தன்னுடைய பல இன்னல் நேரங்களில் தனக்கு பக்க பலமாக இருந்தது தன்னுடைய நண்பன் கமலேஷ் என அவன் அறிந்திருந்தான். அடியை வாங்கிக்கொண்டு சுந்தரேசன் அமைதியாக அறையை விட்டு வெளியேறிய காட்சி கமலேஷின் மனதை நொறுக்கிப்போட்டது.காதலிக்காக, அதுவும் ஒரு ஒருதலை காதலுக்காக தன் நண்பனை தாக்கியதை நினைத்து வேதனையில் தவித்தான் கமலேஷ். காதலை விட நட்பு உன்னதமானது என கமலேஷ் உணர்ந்த தருணம் அது.


இந்த காதலை அன்பு என்று அழைக்க இயலாது. அன்பு சோதனை என்ற தலைப்பு உள்ள காரணத்தால் சிலருக்கு இவ்வாறு சந்தேகம் வரக்கூடும். சரி காதலுக்கும் அன்பிற்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே ஆங்கிலத்தில் "லவ்" தானே.? இங்கே தான் ஆங்கிலம் வெறும் மொழியாகவும் தமிழ் மொழி மற்ற மொழிகளை காட்டிலும் சற்று உயர்ந்ததாகவும் இருப்பது நமக்கு புலப்படும்.


வள்ளுவன் எழுதிய நூலில் அன்புடைமை க்கு தனி அதிகாரமும் காதல் சிறப்புறைத்தல் க்கு தனி அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அன்பு அறத்திலும் (அறத்துப்பால்) காதல் காமத்திலும் (காமத்துப்பால்) நுழைந்து கொண்டது. இதனை மேலும் உடைத்து பார்த்தால், அறத்துப்பாலில் இருக்கும் இல்லறவியலில் "அன்பும்" காமத்துப்பாலில் இருக்கும் களவியலில் "காதலும்" ஒழிந்து கொண்டிருக்கும்.

அப்படியாயின் நம் தமிழ் மூதாதயர்கள் கூறவருவது என்ன? திருமணதிற்கு பின்  வருவது "அன்பு" திருமணத்திற்கு முன் வருவது "காதல்" என்று பொருள் கொள்ளலாமா?

அவ்வாறு பொருள் கொண்டால் வள்ளுவரே நம்மை வசைப்பாடி விடுவார். ஏன்


அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 

மறத்திற்கும் அஃதே துணை


மு.வரதராசனார் உரை:


அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.அன்பு மணம் முடித்தவற்கே உரியது  எனில். உலகில் திருமணமாகாதோர் பலர் அறத்தையும் வீரத்தையும் நிலை நாடவில்லையா?

எனவே அன்பு அனைவருக்கும் பொதுவானது. அது கணவன் மனைவியிடம் மட்டும் வருவதல்ல என தெளிவாகிறது.


பரிசுத்த வேதாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது :


உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.


And thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind, and with all thy strength: this is the first commandment.


இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.


And the second is like, namely this, Thou shalt love thy neighbour as thyself. There is none other commandment greater than these.


இதன் ஆங்கில மொழிபெயர்பில் அன்பையும் லவ் என்றே கூறுகிறார்கள். ஆங்கிலேயன் இரண்டுக்கும் சேர்த்து Love என்று பெயர் வைத்துவிட்டான்.


காதலை love (small case) என்றும் அன்பினை LOVE (capital letters) என்றும் குறிப்பிட விரும்புகிறேன்.

love ஐ கொண்டு கருமாவை வீழ்த்த முடியாது. நம்முடைய பரிசோதனையும் love ஐ வைத்து அல்ல, LOVE ஐ வைத்து.

குழப்புகிறேனா? பொறுத்துக்கொள்ளுங்கள் உங்களை மேலும் சிறிது நேரம் குழப்ப ஆசைப்படுகிறேன்.
சரி மனிதனாக பிறந்த அனைவரும் காதல் வயப்படாமல் இருப்பது கடினம். மனிதனாக பிறந்து அன்பு வயப்படாமல் இருக்க முடியுமா.?


நான் என் நாய் குட்டிக்கு பால் ஊற்றினேன். அதற்கு பெயர் அன்பு தானே?


சாரி சார் அதற்கு பெயர் பரிவு. அன்பல்ல!


சரி.. ஒரு ஏழை முதியவர்க்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தேன். அதற்கு பெயர் அன்பல்லவா?


சோ சாரி! அதற்கு பெயர் இரக்கம். அன்பல்ல.


காலையில் எழுந்து குழித்துவிட்டு மனம் உருகி என் வீட்டு சாமி அறையில் பூஜை செய்கிறேன். அது நான் கடவுள் மீது வைத்திருக்கும் அன்பல்லவா?


அதற்கு பெயர் அன்பல்ல. பக்தி. அது மேலும் வலுவடையும் சமயங்களிள் பயபக்தி ஆகிறது.தாய்தந்தை என் மீது வைப்பதும் நான் தாய்தந்தை மீது வைப்பதும் பாசம்.

நண்பர்கள் இடையே வருவது சிநேகம், நட்பு.


சகோதர சகோதரிகளிடையே வருவது affection எனப்படும் பிரியம்.

அப்படியெனில் LOVE - அன்பு எனப்படுவது என்ன?


அது வாசகர்களுக்கு நான் தரும் assignment. ஆராய்ந்து அடுத்த வாரத்திற்குள் பதிலளியுங்கள்.


கதையை தொடர்வோம்.


காலங்கள் நகர்ந்தது, காவியாவிற்கும் விஷயம் தெரியவந்தது. தனக்கு அப்படிபட்ட எண்ணங்கள் எதும் இல்லையென்றும் தன்னை மீறி கமலேஷுக்கு காதல் வர, தான் காரணமாக இருந்திருந்தால் மன்னித்துக் கொள்ளவும் வேண்டிணாள்.


கமலேஷ் மேற்கொண்டு இதை பற்றி அவளிடம் பேசி தொல்லை தரவில்லை. இந்த விஷயம் வழக்கம் போல வகுப்பு முழுவதும் பரவ, அவரவர் வந்து கமலேஷிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கினர்.


அன்று மதியம் அவன் நகலகத்தில் கையில் "முதலாம் உலகப்போர்" என்னும் புத்தகத்துடன் நின்றுகொண்டிருந்தான். "முதலாம் உலகப்போர்மருதன் என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டு கிழக்குப் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. (குமரிக்கண்டமா? சுமேரியாவா? கூட கிழக்குப் பதிபக்கத்தின் நூல் தான்) கமலேஷ் பொதுவாக புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவன். படிப்பதை விட அடுத்தவரிடம் தான் படிக்கும் புத்தங்களை காட்டிக்கொள்வதில் கூடுதல் ஆர்வமுண்டு.


அவன்  பின்னால் அவனது வகுப்பு மாணவிகளில் இருவர் வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை கமலேஷிற்கு நன்றாக தெரியும். அவள் பெயர் பிரியங்கா. பிரியங்கா காவியாவின் நேருக்கமான தோழி. பிரியங்காவை காவியா "டார்லிங்" என்று அழைப்பது வழக்கம்.எனவே கமலேஷ் பிரியங்காவை "பங்காளி" என்று அழைத்துக்கொள்வான். தனக்கு உடன் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லாததால் பிரியங்காவை தனது உடன் பிறவா தங்கையாகவே நினைத்தான் கமலேஷ்.


அருகே வந்த பிரியங்கா, கமலேஷிடம் "என்ன ரொம்ப சோகமா இருக்கியோ"? என்றாள்.


"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல பங்காளி" என்றான் மிகவும் நார்மலாக

(பிறகு என்ன செய்வது "அவ என்ன என்ன தேடிவந்த அஞ்சல" என்று நடுரோட்டில் ஆடவா முடியும்? நரேனுக்கும் நமக்கும் வித்தியசமில்லையா என்ன”? என்று நினைத்துக்கொண்டான்)


"கவலை படாதீங்க கமலேஷ் உங்க லவ் உண்மையா இருந்தா.. நாலு வருஷம் நீங்க உங்க love express பண்ணலேனாலும் அது கண்டிப்பா சக்சஸ் ஆகும்" என்று பிரியங்காவுக்கு பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

அது யாரிடமிருந்து வந்தது என திரும்பி பார்த்தவனுக்கு ஒரு எளிமையான உடையணிந்திருந்த பெண் தெரிந்தாள். அவள் நம்முடைய வகுப்பு தானா? என்கிற சந்தேகமும் வந்தது அவனுக்கு. மாநிறம். சரி வர அலங்கரிக்கப்படாத கண் புருவம். கள்ளகபடமற்ற சிரிப்பு. உருண்டையான முகம். ஆண்கள் கவனத்தை ஈர்காத உடை, ஆண்கள் கவனத்தை ஈர்காத நடை. "இவள் தான் உன் எதிர்காலம்" என்று ஒருவேளை கடவுள் அசரீரியாக வானத்திலிருந்து கூறியிருந்தால் கூட, வாய்விட்டு சிரித்திருப்பான் கமலேஷ்.


உடையே அணியாமல் வெறும் துண்டை மட்டும் அணிந்திருந்த அந்த எளிமையான காந்தியை முதன் முதலில் ஆங்கிலேயனிடம் காட்டி "இவர் தான் உங்கள் சாம்ராஜியத்தை இந்தியாவை விட்டு ஓட ஓட விரட்டப்போகிறவர்" என்று யாரவது முன்னுரைத்திருந்தால், கோர்ட் சூட் போட்ட வெள்ளைக்காரன் வயிறு வெடிக்க சிரித்து தள்ளிருப்பான். ஆனால் அந்த எளிமையான துண்டுக்குள் ஒளிந்திருந்த மன வலிமை தான் இறுதியில் கோர்ட்டு சூட்டுகளை தங்கள் தாயகத்திற்கே டிக்கெட் எடுக்க வைத்தது.ஒருமுறை உலகின் வல்லரசாக இருந்த ரோமர்கள் இப்படிதான் எள்ளி நகையாடினர். "எங்கே யூதர்களே?! நீங்கள் புதிதாக தேர்ந்தெடுத்த உங்கள் ராஜாவை காட்டுங்கள் பார்போம்" என்று பிலாத்து கூற. உடல் முழுவதும் சாட்டையால் அடிபட்டு ரத்தம் சொட்டிய நிலையில் ஒரு எளிய மனிதரை கொண்டுவந்து நிறுத்தினார்கள். “ராஜா வாழ்க! என்று கைகொட்டி சிரித்துக்கொண்டிருந்தனர். அந்த எளிய மனிதர் தன் உடம்பில் இரத்தம் வடிந்தோட வலியினால் துடிதுடித்துக் கொண்டிருக்கும் போது கூட "பிதாவே. இவர்களை மன்னியும்" என்று மனதில் உருகி ஜெபித்துக்கொண்டிருந்தார். சிலுவையில் அவரை அறையும் போது "யூதரின் ராஜா" என்கிற வாசகத்தை வைத்தார்கள்.


வெட்கத்தைவிட்டு அறிவிக்கிறேன். அந்த எளிய மனிதரே என்றென்றும் என் மனதின் ராஜா. என்னை ஆண்டுகொள்பவர் அவரே. யூதருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே அவர் ராஜா. அந்த அன்பு ஒரு நாள் இந்த உலகை ஆளும். உங்கள் டைரியில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அந்த அன்பு இந்த உலகை ஆளும் பொழுது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும். சிறு குழந்தை பாம்பு புற்றுக்குள் கைவிட்டு விளையாடும். சிறுவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதில்லை. உலகில் கேன்சர் இருக்காது. மரணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை. வலியில்லை. நெகடிவ் எமோஷன்கள் உலகை விட்டு நீங்கியிருக்கும். உலகம் அன்பினால் நிறைந்திருக்கும்.


எளிய பெண்மணி தன் கையை நீட்டினாள்.

"ஹாய் ஐம் அனிதா"

"ஹாய் ஐம் கமலேஷ்"

"தெரியும்" . "நீங்க உங்க பங்காளி கூட தான் பேசுவீங்க, நான் பக்கத்துல இருக்கும் போது கூட என்கிட்ட பேசுனதில்ல" என்றாள் அனிதா.

"அப்படியெல்லாம் இல்ல" என்று அசடு வழிந்தான் கமலேஷ்.

"அந்த புக் எனக்கு கிடைக்குமா" என்றாள் அவள்.

"முதலாம் உலகப்போரா"?

"ஆமா. படிசிட்டு தந்துட்றேன் "

"! கண்டிப்பா" என்று தனது புத்தகத்தை அவளிடம் கொடுத்தான் கமலேஷ்.

"சரி பங்காளி எதும் ஃபீல் பண்ணாத" என்று கூறிவிட்டு பிரியங்கா விடைபெற "சரி பை" என்று அனிதாவும் விடைபெற்றாள்.


கமலேஷ் அனிதாவின் நட்பை வளர்த்த அதே புத்தகம்     கவலை படாதீங்க கமலேஷ் உங்க லவ் உண்மையா இருந்தா.. நாலு வருஷம் நீங்க உங்க love express பண்ணலேனாலும் அது கண்டிப்பா சக்சஸ் ஆகும்" என்கிற வார்த்தை திரும்ப திரும்ப மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒருவேளை தீர்க்கதரிசன வார்த்தைகளாக இருக்குமோ என்றே தோன்றுகிறது. கமலேஷ் அனிதா இடையே நான்கு வருடங்கள் நட்பு மட்டுமே வெளிப்பட்டது. நட்பில் காதல் ஒளிந்திருந்தாலும் அதனை ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்டதே இல்லை. நட்பு தொடங்கி ஆறாவது ஆண்டில் தான் காதல் வெளிப்பட்டது. ஆனால் தாமதமாக வெளிபட்ட காதலே இறுதியில் வெற்றி பெற்றது.


கதை தொடரும்.

4. அன்பு ஒன்றாயிருத்தலில் ஆரம்பமாகிறது - முதலாம் பாகம்கைபேசியில் மிக நீளமான கட்டுரைகள் இயற்றுவது சற்று சிரமமான காரியம் தான்என்னிடத்தில் சிலர் ஆச்சரியப்பட்டு கேட்பதுண்டு "நீங்கள் எப்படி 1500 - 2000 ற்கு மேல் உள்ள வார்த்தைகளை கைபேசியில் தட்டச்சு செய்கிறீர்கள்"? என்றுவேலைகுடும்பம் மற்றும் கதை எழுதுதல் இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று பாதிக்காதவாறு கவனித்துக்கொள்வது ஒரு கலைஇந்த கலையில் நான் ஒரு கத்துக்குட்டி.  கதை எழுதுவது எனது தொழிலன்றுகதை எழுதி அதில் புகழ் தேடிக்கொள்வது என் நோக்கமன்றுஎன் கதையினால் எனக்கு கிடைப்பது புகழ்ச்சியாக இருந்தாலும் இகழ்ச்சியாக இருந்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்என்னுடைய நோக்கம் எல்லாம் என் மனதில் தேக்கிவைத்திருந்த அனைத்தையும் கொட்டுவதோடுஅன்பிற்கு சாட்சியாக பலர் பயன்படும் வகையில் ஒரு நூல் எழுதவேண்டும் என்பதேஇன்று உலகில் நிகழும் பல அக்கிரமங்களுக்கு மூல காரணம்அன்பு உலகில் குறைந்து போனது தான் என்பது என் கருத்து.


நான் சிவகங்கையில் இயற்கை வழியில் சாகுபடி செய்யப்படும் ஒரு நூறு ஏக்கர் பழப்பண்ணையில் கள மேளாலராக பணிபுரிகிறேன்என் மனைவியும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவணத்தில் project executive வாக அருப்புக்கோட்டை அருகில் உள்ள பந்தல்குடி என்னும் ஊரில் வேலை செய்கிறாள்நான் பெரும்பாலும் சிவகங்கையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் பேருந்து பயண நேரத்தை என்னுடைய வார வார blog post ற்காக பயன்படுத்திக் கொள்வேன். (இந்த கதையின் ஆரம்பம் கூட சிவகங்கையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் பேருந்து தான்இவ்வாறாக என்னுடைய வேலைகுடும்பம்கதை எழுதுதலை ஒன்றுக்கொன்று பாதிக்காமல் balance செய்யமுடிகிறது.

கதை தொடர்கிறது.


கமலேஷின் வகுப்பில் அனைவரும் தங்களது ஒருநாள் டிரிப்க்கு தயாராயினர்கமலேஷ் முதன் முதலாக தோட்டக்கலை தேர்ந்தேடுக்கும் முன்னரே அதன் சிறப்பம்சமாக இந்த ஒரு விஷயத்தை கௌன்சிலிங்கில் அனைவரும் கூறிக்கொண்டார்கள் 'தோட்டக்கலை பிரிவில் அதிக டூர் இருக்கும்என்றுகோயம்பத்தூரிலிருந்து அன்னூர்க்கு Soil Science கான ஒரு நாள் டிரிப் அது.


பி.எஸ்.ஈ (அக்ரியும் பி.டெக் (தோட்டக்கலையும் சேர்ந்து சென்றனர்அக்ரி பிரிவில் 90 பேர் இருந்தனர்அவர்களுக்கு 50 பேர் உட்காரக்கூடிய இரண்டு பேருந்துகள் தயாராக இருந்தன. (இப்படிபட்ட பேருந்து ஒன்றில் தான் அக்ரி படிப்பை படித்துக்கொண்டிருந்த  மூன்று பெண்கள் தீ விபத்தில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்)


தோட்டக்கலை பிரிவில் இருபத்தி ஏழு பேர் தான்அவர்களுக்கு ஒரு சிறிய வேன் போதுமானதாக இருந்ததுமாணவிகள் முன் இருக்கைகளிலும்ஏழு ஆண்கள் கடைசி சீட்டிலும் அமர்ந்து கொண்டனர்நரேன் தனது பென் டிரைவுடன் ஒட்டுனர் இடத்திற்கு விரைந்தான்பென் டிரைவில் அவன் பல பாடல்களை தரவிறக்கம் செய்து வைத்திருந்தான்.

வண்டி கிளம்பியதுசாய் சதீஸ்கார்த்திக்சுந்தரேசன்நரசிம்மன் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு அடித்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்பெண்களிடத்திலிருந்தும் நச நச வென்று சுவாரஸ்ய பேச்சு சத்தம் கிளம்பியதுகமலேஷிற்கோ ஒரு அருமையான ஜன்னல் ஓர சீட் கிடைத்தது.


சிறிது நேரத்தில் கீர்ர்ர்ர்ர்ர்ர் என்கிற பெரிய சத்தத்திற்கு பிறகு ஆடியோ சிஸ்டம் சரியானதுஅனைவரும் காதுகளை கூர்மையாக்கி கொண்டனர்ஒரு சிலர் வரப்போகிற பாடலுக்கு நடனமாடவும் தயாராகத் தொடங்கினர்.  பாடல் பாடத்தொடங்கியது. "காதல் பட்ட பாவத்தால் காயம் பட்ட இதயங்களேகண்ணீரை மருந்தாக்குங்களே"!

"அடப் பொண்ணான மனசேபூவான மனசே வைக்காத பொண்ணு மேல ஆசஎன்று டி.ஆர் ன் குரலில் அந்த பாடல் ஒலித்தது


வேனில் இருந்த அனைவரும் முகம் சுளித்தனர்கமலேஷை தவிரமுதன் முறையாக நரேனின் கலை சிந்தனையை நினைத்து வியந்தான் கமலேஷ்.

"வேற பாடல் மாற்றுவேற பாடல் மாற்றுஎன்று உள்ளிருந்த ஒட்டுமொத்த மந்தையும் கத்தியதுஆனால் நரேனோ அசரவில்லைஅந்த பாடல் முடிந்த பிறகு தான் மற்ற பாடல்களை பாடச் செய்தான். "நெஞ்ச்சுக்குள் பெய்திடும் மாமழைபோன்ற ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் பின் தொடர்ந்தன.


ஒரு சிலர் உட்கார்ந்துகொண்டே நடனமாடஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே தூங்கமற்ற அனைவரும் ஒருவரோடு ஒருவர் உரையாடகமலேஷோ வேடிக்கை பார்த்துக் கொண்டேவேறே சிந்தனையில் மூழ்கினான். Soil Science, மண்ணியல் நோக்கி சிந்தனை திரும்புகிறதுஇன்று நாம் மண்ணியலில் புதிதாக என்ன கற்றுக்கொள்ள போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு பெருகியது.

மண் வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாததுமண்னை பற்றி சற்று அசைபோடத் தொடங்கினான் கமலேஷ். "மண்ணின் மீது மனிதனுக்காசைமனிதன் மீது மண்ணுக்காசைமண் தான் கடைசியில் ஜெய்கிறதுஇதனை மணம் தான் உணர மறுக்கிறதுஎன்கிற எஸ்.பி.பி யின் குரலின் வெளிவந்த ஒரு பாடல் மனதில் வீரநடை போடுகிறது.

"மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்என்கிற வசனமும் மனமுழுக்க எதிரோலிக்கிறது.


கமலேஷ் தன்னுடைய முதல் நாள் மண்ணியல் வகுப்பில் ஆசிரியர் கூறிய குறிப்புகளை திருப்பி பார்த்தான்மண் முதலில் பாறைகளிலிருந்து தோன்றிற்றுபாறைகள் முன்று வகைப்படும்Continue reading this ebook at Smashwords.
Download this book for your ebook reader.
(Pages 1-148 show above.)